கடந்த வெள்ளி கிழமை டிசம்பர் 18ல் கத்தார் தன்னுடைய தேசிய நாளை கோலாகலமாக கொண்டாடியது. கத்தார் அரேபிய வளைகுடாவில் இருக்கும் ஒரு சிறிய நாடு. உலகவரைபடத்தில் பார்த்தால் கத்தார் என எழுதுவதற்க்கு கூட இடமிருக்காது. ஆனால் எங்கு தோண்டினாலும் பொட்ரோலும் எரிவாயும் கிடைக்கும். சமிபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட எரிவாயு இன்னும் 500 வருடங்களுக்கு இருக்குமென மதிப்பிடப்பட்டிருக்கிறது. இதனால் தான் பல நாடுகளை ஆட்டிப்பார்த்த பொருளாதார மந்தம் கத்தாரை ஒன்றும் செய்யவில்லை. அரசாங்கத்திடம் அவ்வளவு பணம். 1971 செம்பம்பர் மூன்றாம் தேதி பிரிட்டிஷிடமிருந்து விடுதலைப் பெற்ற பின்பே இந்த வளர்ச்சியை எட்டிப் பிடித்திருக்கிறது. கத்தாரின் சுதந்திர நாள் (பிரிட்டிஷிடமிருந்து) செப்டம்பர் மூன்று. இது அவர்கள் எந்த போராட்டமும் செய்யாமல் கிடைத்தது. ஆணால் அவர்கள் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நாள் அது கத்தார் என்ற நாடு உருவான நாள். பல போராட்டங்களுக்குப் பிறகு சுதந்திரமடைந்த நாள் டிசம்பர் 18!. யாரிடமிருந்த்து?
கிமு ஆறாம் நூற்றாண்டில் அரேபிய பாலைவனத்தில் கண்டு பிடிக்கப்பட்ட் கத்தார். மீன்பிடித்தல் மற்றும் வனிகத்தில் சிறந்து விளங்கியது. கிமு நான்காம் நூற்றாண்டில் மெசபடோமியாவுக்கு மன்பாண்டம் மற்றும் உலர்ந்த மீன் வகைகளை ஏற்றுமதி செய்திருப்பதாக வரலாறு. கிபி ஏழாம் நூற்றாண்டில் அரேபிய தீபகற்ப்பத்தில் ஏற்ப்பட்ட இஸ்லாமிய மறுமலர்ச்சி கத்தாரையும் அனைத்துக் கொண்டது.
அல் அலா அல் ஹட்ரமி என்ற தூதுவரை கிபி 628ம் ஆண்டு பஹ்ரைனை தலமையிடமாகக் கொண்டு பஹ்ரைன் தீவு,குவைத், கத்தார் மர்றூம் அல் ஹசா தீவுகளை ஆண்டுவந்த அல் முந்தீர் இபின் சவா அல் தமிமி என்ற பஹ்ரைன் மன்னரிடம் நபியவர்கள் அனுப்பி இஸ்லாத்தை ஏற்க்குமாறு கோரிக்கை வைத்தார்கள். அக்கோரிக்கையை ஏற்ற மன்னரும் இஸ்லாத்தை தன் வாழ்வியல்
நெறியாக ஏற்றுக் கொண்டார். அவர் ஆளுகைக்குட்பட்ட கத்தாரும் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வந்தது. அதுவே இஸ்லாம் கத்தாரில் தழைக்க ஆரம்பமாக இருந்த்து.
பஹ்ரைன் மன்னரின் ஆட்சியை எதிர்த்து ஷேக் முஹம்மத் பின் தானி அவர்களின் மகன் ஷேக் ஜாசிம் பின் முஹம்மத் பின் தானி என்பவரின் தலைமையில் 1867ம் ஆண்டு கத்தாரிகள் தங்களது போராட்டத்தை தொடங்கினர். ஆனால் மன்னர் பெரும்படையை அல் வக்ரா என்ப்படும் கத்தாரின் நகருக்கு அனுப்பி கத்தார் போராளிகளை அடக்கினார்.பஹ்ரைன் வீரர்கள் செய்த அட்டுழியங்களைன் கண்டித்த பிரிட்டிஷ் அரசு கத்தாரிகளின் கோரிக்கையை அங்கிகரித்து 1878ம் ஆண்டு டிசம்பர் 18ம் நாள் கத்தார் என்ற தனி நாடு உருவாக்கப்பட்டது. அந்த நாளை கத்தார் வெகு விமரிச்சையாக வருடாவருடம் கொண்டாடும். அது போல இந்த வருடமும் மிக விமர்சையாக கொண்டாடனார்கள். தோகா கார்னீஷில் வைத்து பல கன்கவர் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. Water Projector ன் மூலமாக கத்தாரின் வரலாறு காண்பிக்கப்பட்டது. அதை தொடர்ந்து வானவேடிகை நிகழ்சிகளும் போர்விமானங்களின் சாகச நிகழ்ச்சிகளும் நடத்தப்ப்டட்டது. அந்த
படங்கள் பார்க்க.
வெள்ளி கிழமை கார்னீஷ் செண்ற எங்களை காவலர்கள் தடுத்து. "எல்லா ஹபீபீ! ஒண்லி பேமிலி!" என்றனர். போச்சிலர்சுக்கு அனுமதி இல்லையாம். இதுவரைக்கும் கல்யானம் செய்யாததுக்கு வருத்தப்படலீங்க ஆணா அவன் விரட்டுனதிலிருந்து ஒரே பீலிங்கா இருக்கு சீக்கிரமா கல்யானம் பன்னிருகலாமோ? என்ன செய்யிறது அது அது நடக்கும் போதுதானே நடக்கும்.