Your Ad Here

Views

வீட்டின் முன் நின்ற டாடா சுமோவை நோக்கி ஒடிவந்த தாகிராவும் பர்சானாவும் "அண்னே! எப்டினே இருக்க" என்ற வார்த்தைக்கு முன் கண்ணீர்தான் வந்தது.

ஆறு வருடங்களுக்கு பிறகு வளைகுடாவில் இருந்து வருகிறான் அப்துல் ரஹ்மான். மூன்று பெண்களுக்கு நடுவே பிறந்த ஒரே ஆண். ஆதலால் தகப்பனாருக்கு பிறகு குடும்ப பாரம் அவன் மேல்தான் இறக்கப்பட்டது. அவன் தகப்பனார் அல்லாபிச்சை நடத்தி வந்த மளிகை கடை அவர் குடும்பத்தை காப்பாற்றியது. எப்படியோ தன் மூன்று பெண்களையும் அப்துலையும் நன்றாகப் படிக்க வைத்தார். அது மட்டும்தான் அவரால் முடிந்தது.

மகனை இன்ஜீனியராக்கினார். மகள்களை அந்த அளவுக்கு படிக்க வைக்காவிட்டாலும் ஓரளவுக்கு படிக்க வைத்தார். அனைத்து பெற்றோரை போலவும் மகனை வெளிநாடு அனுப்ப துடித்தனர். நல்ல சம்பளத்தில் துபாயில் வேலை கிடைக்கவும், அல்லாபிச்சை படுக்கையில் கிடக்கவும் சரியாக இருந்தது.

பாத்திமாவிற்க்கு மும்முரமாக மாப்பிள்ளை தேடிக்கொண்டிருநத சமயம். பாத்திமா, அப்துலின் அக்கா. ஒன்றரை வருடம் மூத்தவள். இவன் துபாய் சென்ற ஒருவருடத்தில் பாத்திமாவை நல்ல இடத்தில் கரை சேர்த்தாகிவிட்டது. அக்கா திருமணக் கடனை அடைக்க, தங்கைகளுக்கு திருமணம் நடத்தி வைக்க என முழுதாக ஆறு வருடங்கள் ஓடியிருந்தது.

இப்போது அவன் திருமணத்திற்காக பெண்பார்க்கத்தான் வந்திருந்தான். திருமணம் முடித்து விட்டு இங்கேயே இருந்துவிட முடிவு செய்து துபாயில் கணக்கை முடித்து விட்டு வந்துவிட்டான். வந்த இரண்டாவது நாள் வீடே அமளிதுமளிபட்டது. அப்துல்க்கு பெண் பார்க்கத்தான். அல்லாபிச்சை கூட நன்றாக புது துணி உடுத்தி மகன் வாங்கி வந்த துபாய் செண்டை அடித்திருந்தார். வீடே மணத்தது.

"வாங்க சம்சன்னே" என்றார் அல்லாபிச்சையின் மனைவி.

ஷம்சுதீன் அல்லாபிச்சையின் பால்ய தோழ்ர். சீசனுக்கு சீசன் தொழிலை மாற்றினாலும் குணம் மாறாதவர் அதனால்தான் பால்ய நட்பு இத்தனை ஆண்டுகள் நிலையாக இருக்கிறது. அவர்தான் இருவீடுகளுக்கும் தூதுவர். பல திருமணத்தை முன்னின்று நடத்திவைத்தாலும் புரோக்கர் கமிஷன் வாங்காதவர்.

"என்னப்பா சம்சு பெண் வீட்டில் சொல்லிட்டியா?" என்றார் அல்லாபிச்சை

"அதுலாம் சொல்லியாச்சிடே. சீக்கிரம் கெளம்புங்கப்பா" என்று அவசரப்படுத்தினார் சம்சு பாய்.

உறவுகள் புடை சூழ பெண் வீட்டிற்குச் சென்றான். அனைவரின் முகத்திலும் ஒரு கடுகடுப்பு அதற்க்கு காரணம் நேற்று நடந்ததுதான்.

எப்படியாவது தன் மகனுக்கு நல்ல வரதட்சணை வாங்கிவிடவேண்டும் என்பது அல்லாபிச்சை தம்பதியினரின் அவா. மகள்களின் திருமணத்தில் விட்டதை மகனின் திருமனத்தில் பிடித்துவிட சம்சுபாயிடம் விவாதிக்கும் போது வந்த அப்துல் ஒரு பைசா வரதட்சனை வாங்கக் கூடாது என்று கறாராகக் கூறிவிட்டான். இதனால் அனைவருக்கும் சிறு மனஸ்தாபம்தான்.

" சரி எல்லாம் பேசி முடிச்சிரலாம்" என்று சம்சுபாய் ஆரம்பித்து கொடுக்க,

பெண்ணின் தந்தை தன் பெண்ணுக்காக என்ன என்ன செய்வார் என்பதை பட்டியலிட போட ஆரம்பித்தார்.

இடை மறித்த அப்துல் " இல்லங்க வரதட்சணை எதுவும் வேண்டாம். உங்கள் சக்திக்கு உட்பட்டு செய்யுங்கள். கல்யாணத்த கூட சிம்பிளா வச்சிரலாம் வேற எதுவும் வேண்டாம். நீங்கள் கொடுத்தாலும் என்னால் ஏத்துக்க முடியாது" என்றான்.

அவருக்கு ஒருமாதிரியாகிவிட்டது. அவர் எவ்வளவோ கூறியும் அவன் ஒத்துககொள்ளவில்லை. மயான அமைதி சூழ்ந்திருக்க "என்னப்பா சும்மா இருக்கிய யாராவது பேசுங்க" என்ற சம்சு பாய் அப்துலை பார்த்தார்.

நாங்கள் பேசிட்டு சொல்லுகிறோம் என்று பெண் தரப்பில் கூற முடிவேதும் எடுக்காமல் வந்துவிட்டனர்.

அடுத்த நாள் காலையில் வீட்டருகில் உள்ள தேனீர் விடுதியில் தினசரியில் செய்தி படித்துக் கொண்டிருந்தான். துபாய் செல்லும் வரை தினமும் இங்கு வந்துதான் நன்பர்களுடன் அரட்டை அடிப்பான்.

இப்போது ஆறு வருடங்கள் ஊரில் இல்லாத்தால் நண்பர்களிடமிருந்து தனித்து விடபட்டிருந்தான். வெளிநாடு சென்று வந்தால் ஒரிரு நாள் ஊருக்குள் மவுசு இருந்தாலும் பிறகு எவனும் சீந்த மாட்டான். அதுவும் ரிட்டன் இல்லை என்றால் எவனும் மதிக்க கூட மாட்டான். ஆரம்பம் முதல் முடிவு வரை படித்து முடித்து விட்டு வீட்டிற்க்கு புறப்பட்டான்.

வரும் வழியில் எதிரே அத்தை பெண் சாயிரா . அவனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அவன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே அருகில் வந்துவிட்டாள். டக் என்று திரும்பிக்கொள்ள்வும் முடியாது. அவளும் இவனை பார்த்து விட்டாள். எவ்வள்வு மாறிவிட்டாள் குண்டு என்றும் சொல்ல முடியாது. ஒல்லி என்றும் சொல்ல முடியாது ஆனால் இன்று?.

நான்கு வருடமாக பீடி சுற்றித்தான் அவளின் குடும்பம் ஓடுகிறது. அப்துலை விட ஐந்து வயது இளையவள். தகப்பன் இறந்த பிறகு தன் தாயுடன் சேர்ந்து பீடி சுற்றி கால்ம் தள்ள வேண்டியதாயிற்று அதனால் தான் அழகிருந்தும் இன்னும் திருமணமாகாமல் இருந்தாள். இறைவன் கருணையுள்ளவன். அவள் குடும்பத்தில் அவளும் அம்மாவும்தான். அதனால் சாப்பாட்டுக்கு பிரச்சனையில்லை.

"எப்படி இருக்கீங்க? கல்யாணம் எப்போ?"

என்ன சொல்வது என்று முழித்து "சீக்கிரமா" என்றான்

பதிலை கூட எதிர்பார்க்காமல் விருட்டென சென்றுவிட்டாள்.

அவள் திரும்பும் வரை பார்த்துக்கொண்டிருந்தவன் கண்களை துடைத்துக்கொண்டான். பழைய காதலை புரட்டி பார்த்தால் சோகம்தான் போலும்.

அத்தை பெண் மேலும் பக்கத்து தெருதான் அதனால் அடிக்கடி பார்துக்கொண்டதுடன் காதலையும் வளர்த்துக் கொண்டனர். ஆனால் இருவரும் வாய்விட்டு இது வரை காதலை சொன்னதில்லை. ஒருவரையெருவர் காதலிப்பது இருவருக்கும் தெரிந்தும் அவள் சொல்லட்டும் என்று அவனும் அவன் சொல்லட்டும் என்று அவளும் இருந்தார்கள்.

சொல்லலாம் என்று நினைத்த நேரம் அவளின் தகப்பனார் இறந்தது. அதை தொடர்ந்து இரு குடுப்பத்திற்கும் ஏற்பட்ட சொத்து தகராறு. கணவன் இறந்த பின்பு தன் அண்ணனிடம் இருந்து உதவியை எதிர்பார்த்தாள்.

அல்லாபிச்சை மறுத்தது மட்டுமல்லாமல் தன் தங்கையின் மனம் நோகும்படி பேச அதுவே குடுப்பதில் பிளவை ஏற்ப்படுத்தியது. பிறகு அவனும் வெளிநாடு சென்றதும் அவர்களுக்கிடையில் பெரிய இடைவெளி விழுந்துவிட்டது. போக போக சரியாகிவிடும் என்ற அவன் கணிப்பு பொய்யாய்ப் போனது. தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்ற தத்துவத்தை ஏற்று வீட்டில் பார்த்திருந்த பெண்ணுக்கு சரி என்று சொல்லிவிட்டான். இதையெல்லாம் மனதில் அசை போட்டவாறு வீட்டிற்குள் நுழைந்தான்.

உள்ளிருந்து அல்லாபிச்சையும் சம்சுபாயும் பேசிக்கொண்டிருப்பது அவன் காதில் கேட்டது. உள்ளே சென்றால் ஏதாவது சொல்வார்கள் என்று எண்ணியவனாக திண்ணையிலே அமர்ந்துவிட்டான்.

"என்னபா சம்சு பொண்ணு வீட்ல என்ன சொன்னாங்க"

"ஒண்ணும் இல்ல வேற சம்பந்தம் வந்தா சொல்றேன் இது வேண்டாம்"
"என்னாச்சி"

"மாப்ள பணம் ஏதும் வேண்டாமுனு சொல்றதால அவனுக்கு உடம்பில் ஏதாவது குறை இருக்குமோனு சந்தேகப்படுறாங்க அதனால வேண்டாமுனு சொல்ல சொல்லிட்டானுவ"

"என் புள்ளய பாத்தா சொன்னான் அவன்" என்று எகிறிய அல்லாப்பிச்சையை சாந்தப்படுத்திய சம்சு "இந்த பொண்ணு இல்லனா வேற பொண்ணா கிடைக்காது. இதவிட நல்ல சம்பந்தமா அமைறதுக்குதான் இப்படி நடந்துச்சினு வச்சிக்க. சரி நான் வரட்டா" என்று விடைபெற்றவர். வாசலில் பார்த்த அப்துலுக்கும் சலாம் கூறிவிட்டு சென்றார்.

அப்துல் வந்ததும் அல்லாபிச்சை தன் கோபத்தை மகனிடம் காட்டினார்.

"உன்னாலதாண்டா கண்டவனெலாம் நாக்குல நரம்பு இல்லாம பேசுறான். பெழக்க தெரியாதவன" என்று ஆரம்பித்து பேசிக்கொன்டே இருந்தார். ஒரு கட்டத்தில் அவனால் அடக்க முடியாமல்

"போதும் நிப்பாட்டுங்க. இப்போ என்ன பண்ணிட்டேன். என்னால வரதட்சணை வாங்க முடியாது. அல்லாஹ் என்க்கு நல்ல அறிவையும் திடத்தையும் கொடுத்திருக்கிறான் அது போதும். வரதட்சணை வாங்குவது ஹராமுனு தெரிஞ்சும் எப்படி வாங்க துணிஞ்சீங்க? கூடப்பிறந்த தங்கையை கூட பல வருஷமா தள்ளி வச்சிருக்கீங்க. நல்ல வாழ்க்கையை விரும்புபவன் தன் உறவுகளை தன்னுடம் சேர்த்துக் கொள்ளட்டும் என்ற ஹதீசைகூட மறந்துட்டீங்களா?. நான் எதாவது சொன்னா நீங்க கஷ்டப்படுவீங்கனுதான் இது வரைக்கும் ஒண்ணும் சொல்லல அதனால நீங்க செய்றது எல்லாம் சரினு அர்த்தமில்ல" என்று வெடித்தவன் தனது அறைக்குள் சென்று தனியாக அமர்ந்து கொண்டான்.

இரண்டு நாட்களாக யாரிடமும் பேசாமல் மோட்டு வலையை பார்த்து கொண்டிருந்தான். கோபமாக இருந்த அல்லாபிச்சை கூட இறங்கிவந்துவிட்டார். ஆனால் அவன் அசையவில்லை.

சம்சுபாயும் விசயத்தை கேள்விப்பட்டு வந்து விட்டார்.

*******************************&&&&&&&&&&&***********************************

"வாங்க பெரியாத்தா எப்படி இருக்கீங்க? அம்மா சம்சத்தா வந்துருக்காங்க" என்ற சாயிரா வீட்டின் பின்பக்கம் சென்று அம்மாவை அழைத்தாள்

"என்ன மச்சான் இப்பதான் இங்க வர வழி தெரிசுதா. உக்காருங்க" என்று கூறி சேர் எடுத்து போட்டார் அந்த அம்மா.

"அப்டிலாம் இல்லமா வேலை அதிகம் அதான். அப்துல் வந்துருக்கான் தெரியுமா?"

"அவங்கள பத்தி பேசாதீங்க மச்சான். இவங்க அத்தா போன அப்புறம் ஒரு வாட்டி வந்து பாத்தாங்களா. நாதி இல்லாமதானே இருந்தோம். சரி இந்த அப்துலுக்கு என்னாச்சி வந்து ஒருவாரமாச்சு ஆனா இன்னும் வந்து எட்டிப்பாத்தானா? எங்ககிடா பணம் இருக்கா என்ன?" அதற்க்கு மேல் கண்ணீர் கண்களை அடைக்க விசும்பியபடியே அமைதியானார்.

மறைவிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த சாயிரா கண்களைத் துடைத்துக் கொண்டாள். தான் நினைத்து பார்த்த இடத்தில் இன்னொருத்தியா என்பதையே அவளால் ஜீரணிக்க முடியவில்லை.

"சரிம்மா நடந்தது நடந்துருச்சி யாராவது இறங்கி போனுல்ல. பொண்ணு வச்சிருக்க நாளைக்கு அவள நல்ல இடத்துல தள்ளி விடனும். இப்போ அண்ணன் கூட பேசி வச்சி இருந்தீனா சாயிராவ அப்துலுக்கே கட்டி வச்சிரலாம்"

"வேண்டாம் மச்சான் அவங்கதான் பெரிய எடமா பாக்குறாங்க அந்த அளவுக்கு செய்றதுக்கு என்னிடமும் எதுவும் இல்ல"

"அதவுடுமா எல்லா விசயத்தயும் நான் பேசிட்டேன் என்றவர் அங்கு நடந்த அனைத்தையும் கூறினார்.

" சின்ன பயனு பாத்தேன் என்ன பேச்சி பேசுறான் நான் சாயிராவதான் கட்டிப்பேனு அவங்க அப்பங்கிட்டயே சொல்லிட்டான் சரி அவன் இஷ்டப்பட்டா கட்டி வச்சிரலாமுன்னு அல்லாபிச்சையும் சரின்னு சொல்லிட்டான். அவனையும் கூப்டேன் மொதல்லா நீ போயி பேசிட்டு வா அவ ஒத்துகிட்டா நான் வந்து பேசுறன்னான். என்னமா சொல்ற"

"நான் என்னனா சொல்றது அவங்க அளவுக்கு செய்ய என்னிடம் பணம் இல்ல மச்சான்"

"எதுவும் வேண்டாம் கல்யாண செலவகூட அப்துலே பண்ணிப்பான் பொண்ண மட்டும் அனுப்பிவை மீதிய நான் பாத்துக்கிறேன் கவலபடாத"

தன் பெண்ணின் வாழ்வுக்கு வழிகாட்டிய இறைவனுக்கு நன்றி செலுத்தியவராக நிம்மதி பெருமூச்சு விட்ட படியே "சரி மச்சான்." என்றார்.

இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சாயிரா உலகம் சுற்றுவதை அப்போதுதான் உணர்ந்தாள். கனவா? இல்லை இல்லை நிஜம்தான்.அழுகையை அடக்கமுடியாமல் அடக்கினாள். அவள் அடக்கினாலும் கண்கள் அடக்க முடியாமல் ஆணந்தக் கண்ணீரை சொறிந்தன.

வாழ்க மணமக்கள்!






edit post

16 Reply to "ஆனந்தக் கண்ணீர் ('உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக)"

எம்.ரிஷான் ஷெரீப் on Tuesday, June 09, 2009 3:45:00 AM

அன்பின் ஷாஹுல்,

சிறுகதையிலும் தலைப்பிலும் எழுத்துப் பிழைகள் இருக்கின்றன..திருத்தியபின் போட்டிக்குக் கொடுங்கள் நண்பரே !

 

ஷாகுல் on Tuesday, June 09, 2009 3:58:00 AM

சுட்டிகாட்டியதற்க்கு நண்றி ரிஷான்.
திருத்திக்கொண்டிருக்கிறேண்.

 

நாடோடி இலக்கியன் on Tuesday, June 09, 2009 5:17:00 AM

நல்லா இருக்குங்க.
சரளமான நடை.
வாழ்த்துகள்..!

 

கோவி.கண்ணன் on Tuesday, June 09, 2009 6:07:00 AM

மிகவும் சிறப்பாக இருக்குங்க !

வாழ்த்துகள் !

 

ஷாகுல் on Tuesday, June 09, 2009 6:16:00 AM

கதையிலுள்ள எழுத்துப் பிழைகளை திருத்தி உதவிய திரு.ரிஷான் அவர்களுக்கு நண்றி. தேவையான சமயத்தில் கேட்காமலேயே உதவிய அவரது பண்பிற்க்கு இறைவன் நற்கூலியை கொடுக்கட்டும்.

 

ஷாகுல் on Tuesday, June 09, 2009 6:19:00 AM

தங்களின் வாழ்த்துக்து நண்றி நாடோடி இலக்கியன் மற்றும் கோவி.கண்ணன்.

ஆகா பிரபல பதிவர்கள் எல்லாம் நம்ம பதிவ பாக்குறாங்களா?

 

Anonymous on Tuesday, June 09, 2009 7:29:00 AM

good story Keep it up

 

பித்தன் on Tuesday, June 09, 2009 9:10:00 AM

ஊகங்களை உடைத்தெறிந்து கதை நகர்கிறது... .சரளமான நடை.

வாழ்த்துகள்..!!!

 

Anonymous on Tuesday, June 09, 2009 11:56:00 AM

நல்ல முயற்ச்சி

 

Anonymous on Wednesday, June 10, 2009 3:41:00 AM

good story,
best luck

Fiazudeen
Dubai

 

கோகுலன் on Wednesday, June 10, 2009 2:38:00 PM

நல்ல கதை.. நல்ல நடை ஷாகுல்..
வாழ்த்துக்கள்..

 

S.A. நவாஸுதீன் on Thursday, June 11, 2009 4:14:00 AM

நல்லா இருக்கு சாகுல். வெற்றிபெற வாழ்த்துக்கள்.

தலைப்புல (க்) சேர்த்துடுங்க
ஆனந்தக் கண்ணீர்

 

ஷாகுல் on Thursday, June 11, 2009 7:36:00 AM

வருகைக்கு நண்றி நவாஸ்

க் சேர்த்து விட்டேன்

 

தமிழ் பிரியன் on Saturday, June 13, 2009 12:21:00 PM

நல்ல சரளமான எழுத்து நடைங்க... வட்டார வழக்கில் முயற்சித்து இருக்கீங்க.. வெற்றி பெற வாழ்த்துக்கள்!

 

தமிழ் பிரியன் on Saturday, June 13, 2009 12:23:00 PM

dginnah@gmail.com ஃபிரியா இருந்தா மெயில் அனுப்புங்க பாஸ்!

 

Bleachingpowder on Wednesday, June 17, 2009 5:30:00 AM

யதார்த்தமான கதையை அற்புதமான நடையில் எழுதியிருக்கிறீர்கள்.வாழ்த்துகள்.