Your Ad Here

Views

பானுமதி வீட்டை சுத்தம் செய்து கொண்டிருக்கும் போது குமார் கதவை தட்டியதும்

"யாரது?" என்றாள் பானுமதி

"அக்கா இருக்காங்களா?"

"நீங்க யாரு?"

"நான் குமார். தென்காசியிலிருந்து வாரேன்"


கேட்டதும் வெட்கப்பட்டு "அம்மா உன்ன பாக்க தென்காசியிலிருந்து வந்துருக்காங்க" என்றபடியே வீட்டிற்க்குள் சென்றாள்.

பானுமதி தான் அந்த வீட்டின் மூத்த பெண். அவளையும் சேர்த்து ஆறு பேர் அவள் பெற்றோர்களுக்கு. ஆறும் பெண் மக்கள். அவளின் பண்னிரெண்டாவது வயதில் தகப்பனாரை பறி கொடுத்தாள். அவரது அப்பா டீக்கடை வைத்திருந்தார். ஹோட்டல், கமிஷன் கடை என்று அவரது தொழில் வளர கூடவே அவரது நோயும் வள்ர்ந்து வந்தது யாருக்கும் தெரியாமல். தெரியவந்தும் மருத்துவர் அறிவுரைகளை அப்படியே நிராகரித்தார். அதுவே அவரின் முடிவை எழுதியது. அவளுக்கு மட்டும் தான் அந்த சமயத்தில் விவரம் தெரியும். அவளின் தங்கைகள் இழ்ப்பின் வலி தெரியாத வயது.

அவள் பதினாறு வயாதானவுடன் திருமணப் பேச்சை எடுத்தார்கள். பெண் எடுத்தால் இந்த வீட்டில் இருந்து தான் எடுப்பேன் என மகேஷ்வரன் குடுப்பத்தார் பிடிவாதமாக இருந்தனர். மகேஷ்வரனின் மனைவி பானுமதியின் தாய்க்கு தூரத்து உறவினர். அந்த அம்மாவுக்கும் அது நல்ல சம்பந்தமாகப் பட சரி என்றாள்.

தன் வருங்கால மனைவியை காண தான் குமார் வந்திருக்கிறான்.

"வாங்க தம்பி, வீட்டல எல்லாரும் செளக்கியமா?" என்ற படியே தன் மாப்பிளையை வரவேறார் பானுமதியின் தாய்.

"என்ன தம்பி இவ்ளோ தூரம். ஏதாவது முக்கியமான வேலையா?"

"ஆமாக்கா, ஒரு விஷயமா வந்தேன். அப்படியே உங்களையும் பாத்துட்டு போலாமுனுதான்"

சாப்பிட்டு விட்டு செல்லுமாறு வற்புறுத்தவே அவனும் சம்மதித்தான். அவன் செல்லும் வரை அவள் நடு வீட்டிற்க்குள் வரவில்லை.

திருமணமும் இனிதே நடந்தேறியது. அப்போது அவளுக்கு பதினாறு வயதுதான். முதலிரவிலே தன் வீர பிரதாபங்களை தன் மனைவிக்கு விளக்கி ஒரு விரிவுரையே நடத்தினான். அதாவது ஒரு பென்னை காதலித்தது திருமணம் செய்யாமல் ஏமாற்றியது. துப்பு கெட்டவர்களின் சகவாசத்தால் கல்லூரி படிப்பை பாதியிலே விட்டது என அவன் சொல்ல சொல்ல அவள் மனதில் சந்தேகம் சோபா போட்டு அமர்ந்து விட்டது. நுணலும் தன் வாயால் கெடும்.

குமார் தன் தாயாருக்கு சொந்தமான வயலில் தான் தன் தந்தையுடன் சேர்ந்து பாடு பட்டு கொண்டுருந்தான். பிறகு தன் மாமியார் வீட்டுடன் சென்று சிறிது காலம் தள்ளியவன். பானுமதியை அவள் அம்மா வீட்டிலே விட்டு விட்டு சென்னைக்கு வேலை தேடி சென்று விட்டான். நல்ல வேலை கிடைக்கவும் பானுமதியை தன்னுடன் அழைத்துப் போவதாகவும் கூறிவிட்டு சென்றான்.

மாதம் தவறாமல் பானுவிற்க்கு கடிதம் எழுதிவிடுவான். அந்த மாதமும் அப்படித்தான் கடிதம் வந்தது. அதில்

" அன்புள்ள பானுவிற்க்கு, என்க்கு இங்கே கவர்மெண்டு வேலை கிடத்திருக்கிறது. அதற்க்கு ரூபாய் ஐந்தாயிரம் கட்ட வேண்டும். என்னுடைய அப்பா அம்மாவிடம் கேட்டு பார்த்து விட்டேன். யாரும் தரவில்லை. எனக்கு நீ தான் உதவ வேண்டும். அக்காவிடம் சொல் இந்த உதவியை மட்டும் செய்தால் என்றென்றும் நான் நண்றி உள்ளவனாக இருப்பேன். சீக்கிரம் பணத்திற்க்கு ஏற்பாடு செய்யவும்." - இப்படிக்கு, குமார் என்றிருந்தது.

பணம் தயார் என்றும் உடணடியாக வருமாரும் பதில் கடிதம் அனுப்பினாள் பானுமதி. தன் திருமணத்திற்க்கு வீட்டில் போட்ட தங்க காப்பை விற்று பணத்தை ஏற்ப்பாடும் செய்திருந்தாள்.தனக்கு முதல் மாதம் சம்பளம் கிடைத்தவுடன் தங்க காப்பு எடுத்து தருவதாக பானுவிடம் வாக்களித்தான் குமார். சில மாதங்களிலே பானுவையும் சென்னைக்கே அழைத்து வந்து விட்டான்.அவளுக்கு சென்னது போல் தங்கத்தில் வளையல் எடுத்து தந்தான். மிக அன்பாகத்தான் இருந்தான். குழந்தை இல்லை என்ற குறையை தவிர வேறு எந்த குறையும் இல்லை. குழந்தைக்காக அவர்கள் பார்க்காத மருத்துவர்கள் இல்லை செல்லாத கோவில்கள் இல்லை. ஐந்து வருடங்களுக்கு பிறகு அவள் கர்பமானாள். பத்தாவது மாதத்தில் அழகான பெண் குழந்தை பிறந்த்து.

இப்போடுதான் விதி தன் வேலையை காட்டியது. தன் கனவருக்கும் உடன் வேலை பார்க்கும் ஒரு பெண்னுக்கும் தொடர்பிருப்பதாக அரசல் புரசலாக செய்தி வந்தாலும் அவள் நம்பாமல் தான் இருந்தாள்.

சில நாட்கள் வீட்டிற்க்கு நேரமாகி வருவது வராமல் இருபது போன்ற நடவடிக்கைகளால் சந்தேகம் ஏற்ப்பட

"என்னங்க ஏன் இவ்ளோ நேரம். எங்க போயிட்டு வாறீங்க" என்ற பானுவிற்க்கு

"ஆபீஸ்ல வேலை நரசிம்மன் கூட தான் வந்தேன்" என்று பதி கூறினான்.

"நரசிம்மன் ஏழுமணிக்கே வந்துட்டாரு. அவர் வீடல போய் கேட்டுட்டு தான் வந்தேன். நீங்க ஆறு மனிக்கே வீட்டுக்கு கிளப்பிட்டதா சொன்னாரு"

பளார் என்று பானுவின் முகத்தில் அறைந்தான்.

"ஏண்டி! நாயே என்ன தைரியம் இருந்தா அவன் வீட்டுக்கு போயிருப்ப. அவ்ளோ ஆயிருச்சா உனக்கு" என்று தவறை மறைக்க பானுவை துன்புறுத்தினான். அப்போது அவள் இரண்டவது குழந்தைய சுமந்து கொண்டிருந்தாள்.

அதிலிருந்து தினம் தினம் அவளுக்கு வீட்டில் நரக வேதனைதான். எதற்க்கெடுத்தாலும் அடிதான்.

*************&^^^^&***********&^^^^&**********&^^^^&*****************

"அம்மா! யாருமா வீட்ல" என்று குரல் வர

"யாருங்க அது" என்று பானு கேட்க

" நான் நரசிம்மன்"

"வாங்க சார். என்ன திடீர்னு. இருங்க காபி போட்டு தாரேன்" என்ற பானுமதியை இடை நிறுத்தி

"இல்லமா உன்கிட்ட முக்கியமா விஷயம் பேசனும். குமாரேட நடவடிக்கை ஒண்னும் சரியில்ல. அந்த பொன்னு கூடதான் சுத்துறான். என்ன ஏதுனு கேளுமா. இல்லனா வீட்டில் பெரியவர்களுக்கு சொல்லி பேச்ச சொல்லு. தேவதை மாதிரி பொண்டாட்டியை வீட்ல வச்சிக்கிட்டு குரங்கு மாதிரி ஒன்ன புடிச்சிருகானே. மனசு கேக்கலம்மா. நான் சொன்னாலும் கேக்கல, யாருடா நீ அப்படின்றான்"

"அவருட்ட கேட்டதுக்கு தான் சார் அன்னக்கி அப்படி அடிச்சார். அவருக்கு கல்யானம் ஆகி குழந்தை இருக்குனு அந்த பொன்னு கிட்ட சொல்லுங்க சார்"

"அது அந்த பொன்னுக்கு கூட தெரியும். தெரிந்து தான் எல்லாம் நடக்குது. சரி நான் வாரேன்" என்று அவர் செல்ல

இனிமேலும் பொறுக்க முடியாது என்று முடிவு செய்தவள் தனது மகளை அழைத்துக் கொண்டு அவன் வேலை செய்யும் அலுவலகம் சென்றாள். அங்கு இருவரும் அருகருகே அமர்ந்து சிரித்து பேசிக் கொண்டிருப்பதை பார்த்த அவளுக்கு ஜிவ்வென்று ஏற

"என்ன நான் ஒருத்தி வீட்டில் இருக்கும் போது இங்க இவ கூட வந்து கூத்தடிக்கிறியா?" என்று அவள் முடிக்கும் முன்பு பளார் என்று கண்னத்தில் ஒரு அறை விட்டான்.

"இவ முன்னாடி என்ன அடிக்கிற அளவுக்கு அவா உணக்கு முக்கியமா போயிட்டாளோ?" என்பதற்க்கு மேல் பேச முடியாமல் அவளுக்கு தலை சுற்றியது. அங்கு ஒரு நாற்காலியில் சரிந்து விட்டாள்.

ஒரு கர்பினி பெண் எவ்வளவு தான் தாங்க முடியும். அலுவலகத்தில் அனைவரும் பானுவை அழைத்துக் கொண்டு வீட்டிற்க்கு செல்லுமாறு வற்புறுத்தவே அவளை கூட்டிக் கொண்டு வீட்டிற்க்கு வந்து சேர்ந்தான். சில வாரங்களில் பானுமதி அழகான ஒரு ஆண் மகவை பெற்றெடுத்தாள். மகளையும் பேரனையும் பார்க்க வந்த பானுமதியின் தாயார் விஷயத்தை கேள்விபட்டு மருமகனிடம் தன் மகளை கைவிட வேண்டாமென வேண்டி கொண்டார்.

சில மாதங்கள் பிரச்சனையின்றி போய் கொண்டிருந்த அவள் வாழ்கையில் அன்று பேரதிர்ச்சி என்றே சொல்ல வேண்டும். குமார் அந்த பென்னை திருமனம் செய்து கொண்டானாம். நரசிம்மன் தான் சொன்னார். அவன் அலுவலக வேலை என்று சென்றது பொய்யென்றும் உண்மையில் அவளை திருமனம் செய்ய தான் சென்றதாகவும் சொன்னார். அதிர்ச்சியில் அபபடியே
உறைந்து விட்டாள். பானுவின் அம்மாவும் மாமாவும் அவசரமாக சென்னை வந்து அவனிடம் பேசி பார்த்தன்ர். வெளியே செல்லுமாறு எடுத்தவுடன் சொல்லிவிட்டான்.

"இவன் கிட்ட பேசி பலனில்லை வாக்கா நாம் போலிசில் கம்ளெயிண்ட் பன்னலாம்" என்று அவர் போலிசில் கொடுத்த புகாரை தன்னுடைய செல்வாக்கினால் அப்படியே அமுக்கி விட்டான். மேலும் அவளை சென்னையிலிருந்து அனுப்புமாறும் புது மனைவி கட்டளையிட வீட்டு வாடகையை கொடுப்பதை நிறுத்தினான். புது மருமகள் கை நிறைய சம்பாதிப்பதனால் அவன் குடுப்பத்தாரும் குமாரையே ஆதரித்தனர்.

மகேஷ்வரன் அந்த பெண்னின் சகோதரர்கள் பானுவின் வீட்டிற்க்கு வந்து உடனடியாக சென்னையை விட்டே செல்ல வேண்டுமெனவும் தவறினால் குழைந்தைகள் உட்பட அனைவரும் பலியாக நேருமெனவும் மிரட்டவே பயந்த பானுமதியின் குடும்பத்தார் அவளை தன்னுடன் அழைத்து சென்றானர்.

*************&^^^^&***********&^^^^&**********&^^^^&*****************

"வாப்பா என்ன தகவல் சொன்னான்ங்க" என்றாள் பானுமதியின் தாயார் தன் சகோதரனிடம்.

"மாப்பிளை சரின்னு சொல்லிட்டாரு. பானு சரின்னு சொன்னா முடிச்ச்சிரலாம்"

"நல்ல விசாரிச்சியா மாப்ள நல்லவரு தானே சொந்தகாரனு நம்பி பொன்ன குடுத்தேன் ஆணா அவன் அப்டி பண்ணிட்டு போயிட்டான்."

"கவல படாதக்கா அவா பட்ட கஷ்டத்திற்க்கு கடவுள் நல்ல வழி காட்டியிருக்க்கர். மாப்ளய என்க்கு நல்லா தெரியும் ரொம்ப நல்லவரு. எல்லாம் நல்லபடியா நடக்கனுமுன்னு வேண்டிக்க சரி பானுட்ட கேளுக்கா"

"நீயே வந்து கேளுப்பா"

"என்னமா பானு எப்படி இருக்க? புள்ளங்க எப்படி இருக்கு"

"வாங்க மாமா. நல்லா இருக்கேன். ரெண்டு பேரும் இப்ப தான் எழுந்திருசாங்க. ஏய் மீனா, சாமி தாத்தா வந்துருகாங்க இங்க பாரு" என்று அருகில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை அழைத்தாள்

"அத்தை எப்படி மாமா இருக்காங்க"

"நல்லா இருக்காமா உணக்கு இப்படி ஆனத நெனச்சி தான் கவல படுறா. ஏண் உன் அம்மாவ எடுத்துக்கோ எவ்ளோ கஷ்டப்படுறா"

"கஷ்டப்பட்டு என்ன மாமா செய்ய எல்லாமே விதிப்படிதான் நடக்கும்."

"அப்படி பேசாதமா. என்ன வயசாயிருச்சி உணக்கு இருபத்தியொரு வயசுதனம்மா ஆகுது. இன்னொரு கல்யானம் பன்னிக்க."

" இல்ல மாமா என் புள்ளயள அனாதையா விட்டுட்டு என்னால இன்னொரு கல்யானம் பன்னிக்க முடியாது"

'குழந்தைங்க எங்க நிக்க போது அம்மா கூடதானே இருக்க போவுது வேனுன்னா வந்து பாத்துட்டு போ. எனக்கு தெரிஞ்சவருகிட்ட உன்ன பத்தி சொன்னேன். அவரும் சரின்னு சொல்லிட்டாருமா. நீ என்னமா சொல்ற"

சிறிது நேரம் யோசித்தவள்

"எனக்கு நடந்தது நடந்தாதாகவே இருக்கட்டும். அப்பன் தான் இல்லனு ஆகிருச்சி அம்மாவும் இல்லனா அவங்களால தாங்க முடியாது. என் குழந்தைகள் தான் என்னுடைய உலகம். அவர்கள் தான் என் நம்பிக்கை அவர்களின் எதிர்காலம் தான் எனக்கு முக்கியம்." என்றாள் அமைதியாக ஆணால் தீர்மானமாக




edit post

1 Reply to "அன்னை மட்டுமே அன்பின் எல்லை"

Anonymous on Monday, June 15, 2009 2:02:00 PM

good post. Keep it up

Fiazudeen
Dubai