Views
ஊரில் இருக்கும் வரை தமிழ் தான் பேசுவது. சுட்டு போட்டாலும் ஆங்கிலம் வராது. முதல் முறையாக துபாய் சென்றதும் மொழி பிரச்சனை தான் மற்ற எல்லா பிரச்சனைகளை விட முன்னுக்கு நின்றது. அலுவலகத்தில் பெரும்பாலும் தமிழர்கள் தான் என்பதால் தமிழில் பேச எந்த தடையும் இல்லை. வெளியில் ஏதோ எனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் வெயில் அடிசிங் சூரியன் கொளுத்திங் என்றாவது என்ன சொல்ல வருகிறேன் என்று புரிய வைத்துவிடுவேன். இருந்தாலும் எதிரே இருப்பவர் மண்டை காய்ந்து விடுவது எனக்கே தெரியும். என்ன செய்வது.
ஆணால் ஆங்கிலம் தெரியதவர்களிடம் உதாரனம் தேனீர் விடுதி, சலவைக்கு கொடுக்கும் இடம், தெரியாத இடத்திற்க்கு வழி கேட்க வேண்டும் என்றால் எதிரே வருவது ஒன்று மலையாளியாக இருக்கும் அல்லது பாக்கிஸ்தானியாக இருக்கும்.
மலையாளியிடம் கேட்டால் முதல் கேள்வி நிங்கள் மலையாளியோ? என்பதாக இருக்கும் இல்லை எனும் பட்சத்தில் யான் அறியத்தில்லா? என்று போய் விடுவார்கள். அடுத்து பாகிஸ்தானிதான் ஏறக்குறைய அனைத்து பாக்கிஸ்தானியும் துபாய் வரைபடத்தையே மணப்பாடம் செய்திருப்பார்கள் போல எந்த இடத்திற்க்கு வழி கேடாலும் சரியாக சொல்வார்கள். ஆனால் நமக்குத்தான் ஒன்னும் புரியது.
"சீதா ஜாவ். உதர் ஏக் மஜீத்தனா உதர்சே லெப்ட் மாரோ பிர் சீதா ஜானெதோ சிக்னல்கா சாம்னே. டீகே பாய் சம்ஜே?" என்று போய் கொண்டே இருப்பார்கள்.நாம் திருவிழாவில் கானாமல் போன குழந்தை போல டீகே பாய் என்று பதிலளித்து விட்டு விதியை நொந்த படியே செல்ல வேண்டும்.நமக்கு ஹிந்தியில் ஏக் , தோ, தீன், சார், பாஞ் தவிர வேர எதுவும் தெரியாது. அதற்க்கு அடுத்து சே அதாவது ஆறு என்பதே இங்கு வந்துதான் தெரியும்.
சிலகாலம் கழித்து எனக்கும் ஹிந்தி பேச வந்திருந்த காலம். வேற வழி பேசிதான் ஆக வேண்டிய சூழல். இந்த சூழ்நிலையில்தான் நான் சென்னையில் இருந்த காலத்தில் கிடைத்த எனது நன்பனும் துபாய் வந்தான். அவனை பார்த்து விசாரிதுவிட்டு வரும் வெள்ளிகிழமை வெளியில் செல்ல திட்டமிட்டு அதன்படியே வெளியில் சென்றோம். பர்துபாயில் ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்று மொபைல் பார்த்துக் கொண்டிருந்தோம்.பார்க்க மட்டும் தான் செய்வோம். கடைகாரர் அந்த செல்பேசியின் பயன்பாடு மற்றும் சிறப்பம்சங்களை பட்டியலிடார் ஹிந்தியில்தான். இப்போ நமக்குதான் ஹிந்தி பேச தெரியுமே நாமும் ஹிந்தியிலேயேபேசிவிட்டு சிறிது நகர்ந்தவுடன் என் நன்பன் கேட்டான்
"டேய்! மாப்ள உனக்கு தெலுங்கு கூட தெரியுமாடா?' என்றான்.
"தெலுங்கா? நான் பேசுனது ஹிந்திடா" என்று சொல்ல
"நான் தெலுங்குனு நெனச்சேண்டா" என்றான்
அப்படினா என்னுடன் ஹிந்தியில் பேசிய அந்த நபர் .............................
பி.கு: இப்போ ஆங்கிலமும் சரி இந்தியும் சரி நல்லா பேசுவேன். அதனால் யாரும் மிரள வேண்டாம் என கேட்டூக் கொள்கிறேன்.





4 Reply to "டேய்! மாப்ள உனக்கு தெலுங்கு கூட தெரியுமாடா?"
SUREஷ் (பழனியிலிருந்து) on Monday, June 29, 2009 6:19:00 AM
வாழ்க்கை தலைவா../
ஷாகுல் on Monday, June 29, 2009 7:38:00 AM
வருகைக்கு நண்றி சுரேஷ்
ச்சின்னப் பையன் on Monday, June 29, 2009 8:05:00 AM
:-)))))))))))))
Anonymous on Monday, June 29, 2009 1:42:00 PM
ha ha ha
Leave a Comment
Post a Comment