Views
முதல் பகுதியை படிக்க
இடம் : துபாய் சர்வதேச விமான நிலையம்.
எப்படியோ துபாய் வந்து சேர்ந்த விஜய் தன்னுடைய சுமைகளை எடுத்துக் கொள்ள விரைகிறார். அவசர அவசரமாக ஒரு தள்ளு வண்டியில் நான்கைந்து பேக்குகளை ஏற்றிக்கொண்டிருக்கும் போது அங்கு வந்த சக பயனி
சக பயனி : சார் அது என்னோட பேக்கு
விஜய் : யோவ் எத்தன பேக்கு கெடக்கு உனக்கு எது வேனுமோ எடுத்துக்கோ. நான் எடுத்தத எதுக்கு கேக்குற.
சக பயனி : ங்கொய்யால! கோயில் வாசல்ல தேங்கா பொறுக்குறதுன்னு நெனச்சியா. ஒழுங்கா பேக்க குடுடா.
எவ்வளவோ சொல்லியும் விஜய் கேட்காததால் வந்திருந்த கூட்டமே ஒரு காட்டு காடியது. உடனடியாக விஜய் மூர்சையானார்.சுயநினைவு வந்ததும் சுற்றும் முற்றூம் பார்த்த விஜய் தன் சுமைகளுக்கு அருகே ஒரு பாக்கிஸ்தானி அமர்ந்திருப்பதை பார்த்தவர்.
விஜய் : நான் எங்க இருக்கேன்.
பாக்கி : மதினத் ஜீமைரால மல்லாக்க படுத்துகிட்டு மீன் புடிச்சிக்கிட்டு இருக்க. (பாக்கிஸ்தானி தமிழ் பேசுவான என நீங்கள் கேட்கலாம். எத்தன விஜயகாந்தின் படத்தில் வரும் பாக்கிஸ்தானி வில்லன்கள் எல்லாருமே தமிழில் தான் பேசுவார்கள் அதை பின்பற்றியே விஜய் படத்திலும் பாக்கிஸ்தானி தமிழில் பேசுகிறார்)

விஜய் : என் லக்கேஜ்லாம் பத்தரமா இருக்குல்ல
பாக்கி : டேய்! என்னடா லக்கேஜ் இது ரெண்டு சூட்கேசு புல்லா மார்க்ஷீட்தான் வச்சிருக்க.
விஜய் : ஆமாங்கனா, கஷ்டப்பட்டு படிச்சது
பாக்கி : படுத்தாதடா எதாவது தேரும் நெனச்சி உன்ன ஏர்போர்ட்ல இருந்து இங்க வரைக்கும் தூக்கிட்டுவந்து உன் பேக்க பாத்தா மூனு வருஷ கோர்ஸ முப்பது வருசமா படிச்சி இத்தன மார்க்சீட்டு வச்சிருக்கியே உனக்கு எவண்டா வேலை குடுப்பான்.
விஜய் : இந்தியால எவனும் வேலை குடுக்கலனு தான் இங்க வந்துருக்கேன்.
பாக்கி : மவன இனி எங்காவது உன்ன பாத்தேன் அப்புறம் தாண்டி உனக்கு இருக்குது என்று எச்சரித்து விட்டு செல்கிறார்.
விஜய் : நமக்கு நேரமே சரி இல்லயோ போரவன் வாரவனுல்லாம் காட்டு காட்டுனு காட்றான்.
துபாயில் தன் கல்லூரி நன்பனை கான விரைகிறார் நமது தளபதி. நன்பனுக்கு தொலைபேசி இருக்கும் இடத்தை அடைகிறார்.
விஜய் : டேய்! எனக்கு ரூம் புக் பன்னிட்டியா. ஏசி தானே. ஏன்னா ஏசி இல்லாம் என்னால இருக்க முடியாது.
நன்பன் : ஏசி தான் வா வா
பேசிக்கொண்டே நன்பனின் இல்லத்த அடந்த தளபதி
விஜய் : இவ்ளோ பெரிய வீட்லயாட நீ இருக்க?. மச்சி நீ உன்மையிலே பெரிய ஆளுடா.
நன்பன் : லூசு அது ரினைன்சன் ஹேட்டல். அதுக்கு பின்னாடிதான் நம்ம வீடு இருக்குது வா
நன்பனின் வீட்டை கண்டதும் அதிர்சியடையும் விஜய் அந்த அதிர்ச்சி மாறாமல்
விஜய் : என்னடா இது பத்துக்கு பத்து ரூமல் பத்து பேரு இருக்கீங்க.
நன்பன் : இங்க வந்து என்ன தாஜ்மஹாலா கட்டமுடியும். ஏற்கனவெ பத்து பேர் இருக்காங்க உன்னயோட சேத்து 11 பேரு.
விஜய் : ஏசி ?
நன்பன் : ஏசி இங்க இருக்கு அந்த சுவிட்ச போடு
விஜய் : ஏசில இருந்து சத்தம் மட்டுந்தான் வருது.
நன்பன் : கொஞ்ச நேரம் கழிச்சி காத்து வரும்.
விஜய் : பாத்ரூம் ?
நன்பன் : அங்க இருக்கு பாரு. டிகிரி பாஸாயிட்டியா?
விஜய் : போன மாசந்தான் பாஸானேன். உடனே இங்க வந்துட்டேன்.
நன்பன் : என் மகனையும் அடுத்த வருசம் அந்த காலஜ்லதான் சேக்கனும் ஆமா எதுக்கு நீ இப்போ துபாய் வந்துருக்க?
விஜய் : அது ஒரு லட்சியம் டா அந்த லட்சியத்த அடைறவரைக்கும் நான் இங்க இருந்து போக மாட்டேன்.
நன்பன் : என்னடா லட்சியம்?
தன் லட்சியத்தை சொல்ல ஆரம்பிக்கிறார்.
அது என்ன லட்சியம் - அடுத்த பாகத்தில்
__________________________________________________________________
Madinat Jumaira - துபாயில் ஜீமைரா பீச்சில் அம்மைந்திருக்க கூடிய ஒரு ஐந்து நட்சத்திர விடுதி.






1 Reply to "விஜய் படத்தின் கதை - 2"
Anonymous on Tuesday, July 07, 2009 2:47:00 AM
Definitly this film will win Oscar award. Hereafter write as "Oscar Vijay."
Leave a Comment
Post a Comment