Views
இளைய தளபதி விஜயின் 50வது படத்தின் கதை விவாதத்தின் போது வெளியே கசிந்து விட்டதாம். கதை முழுவதும் துபாயில் நடக்கிறதாம். அவருக்கு ஜோடியாக ஹிபா வஹ்பி நடிக்க வேண்டுமென விஜய் ஆசைப்படுகிறார். முதல் முறையாக இதில் விஜய் அப்பா, அன்னன், தம்பி என மூண்று வேடத்தில் நடிக்கிறார். கிளைமேஸில் போலிசாகவும் வருகிறார். அந்த கதை உங்களுக்காக கீழே கொடுக்கப்பட்டுள்லது.
சென்னை அன்னா பன்னாட்டு விமான நிலையத்தில் காட்சி ஆரம்பிக்கிறது.

வேகமாக வரும் விஜய் விமான நிலையத்திற்க்குள் நுழைய முயல்கிறார். அப்போது இடைமறித்த காவலாளி
காவலாளி : டிக்கட் காட்டுங்க.
(இதே போன்ற பாடல் இந்த படத்தில் இடம்பெறுகிறதாம்)
விஜய் : நான் டிக்கெட் ரிசர்வ் பன்னலங்னா பிளைட்ட்ல டிக்கெட் எடுதுக்குவங்னா.
காவளாளி : இன்னா பிளைட்ல எடுப்பியா? என்ன கேனனு நெனச்சியா? யாருய்யா நீ? எந்த ஊரு?
விஜய் : நீ எந்த ஊரு நான் எந்த ஊரு முகவரி தேவையில்ல,
நீ என்ன உறவு நான் என்ன உறவு
சொந்த்தில் அர்த்தமில்ல, தொப்புள்
கொடி உறவா? இல்ல இல்ல.
என அறிமுக பாடல் ஒண்று பாட நொந்து போன காவலாளி
காவலாளி : அய்யா தெரியாம கேட்டுடேன். டிக்கெட் எடுத்த மட்டுந்தா உள்ள போக முடியும்.
விஜய் : டிக்கெட் எடுக்குரதுக்குள்ள பிளைட் போயிடும்.
காவலாளி : இல்லீங்க அங்க கூட்டமா இருக்குல்ள அதுதான் எமர்ஜென்சி கவுண்டர் அங்க போனீங்கனா. உடனே டிக்கெட் கிடைக்கும்.
விஜய் கூட்டம் நின்ற இடத்தை நோக்கி சென்றதும் பெருமூச்சி விட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார் காவலாளி. கூட்டத்தை தள்ளி விட்டு
விஜய் : துபாய்க்கு அவசரமா ஒரு டிக்கெட் குடுங்க
அங்கு அமர்ந்திருப்பவர் : எவண்டா அவன் பப்ளிக் டாய்லட்ல வந்து துபாய்க்கு டிக்கெட் கேக்குறவன்.
விஜய் : நான் தாங்கனா. என்ன தெரியலயா?
அ.அ : தெரியாமத்தானடா கேக்குறேன். என அவர் கேட்டவுடன்.
வில்லு வில்லு வில்லு வில்லு வில்லேய் என கோரஸீடன் நடந்துவர டரியலாகிப் போனவர் தன் கைகாசை போட்டு டிக்கெட் வாங்கி கொடுக்கிறார்.
வெற்றிகரமாக டிக்கெட் வாங்கிய விஜயை அவர் நன்பர்கள் சந்திக்கிறார்கள்.
நன்பர் : டேய் நெஜமாவாட துபாய் போற. எதுக்குடா வேண்டாண்டா.
விஜய் : நான் ஒரு வாட்டி முடிவு பன்னிட்டா என் பேச்ச நானே கேட்க மாட்டேன்.
நன்பர் : எப்போடா திரும்பி வருவ
விஜய் : ரெண்டு வருஷமாகும். என விஜய் சொல்ல உடனே நன்பர்கள் சந்தோசத்தில் துள்ளிகுதிக்கிறார்கள்.
நன்பர்கள் கோரஸாக : இனி ரெண்டு வருஷத்துக்கு ஓசி டீ குடிக்க வரமாட்ட என சொல்ல கடுப்பான விஜய்
விஜய் : சைலன்ஸ்! பேசிக்கிட்டு இருக்கேன்ல என சொல்லிவிட்டு விமான நிலயத்திற்க்குள் நுழைகிறார்.





5 Reply to "விஜயின் 50 வது படத்தின் கதை லீக்!!!"
கோவி.கண்ணன் on Monday, July 06, 2009 2:28:00 AM
:)
கலக்கல் !
விஜய் படத்தில் கதை இருக்கிறது என்று லீக் ஆனாலே அது படத்துக்கு மேலும் வெற்றியைத் தரும் !
ஜெகதீசன் on Monday, July 06, 2009 2:50:00 AM
:)
ஷாகுல் on Monday, July 06, 2009 3:24:00 AM
வருகைக்கு நண்றி கோவி.கண்ணன் மற்றும் ஜெகதீசன்
Saravanan Renganathan on Monday, July 06, 2009 6:04:00 AM
:-)
ங்ண, விஜய் படத்துல கதைகிலாங்னா ...
டைடில்லயே டோட்டல் தமிழ் நாட்ட டரியலாக்காதிங்னா ..
samosa on Tuesday, July 07, 2009 6:31:00 AM
சூப்பரப்பு
Leave a Comment
Post a Comment