Your Ad Here

Views

சென்னை அசோக் பில்லரிலிருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்திற்க்கு செல்லும் வழியில் ஒரு விளம்பரத்தை பாத்து திகைத்துதான் போனேன். அந்த விளம்பரபலகை இதுதான் திரு ஓம்ஜீ உலகநாதன் எனும் சோதிடர் வைத்திருக்கிறார். அதில் எழுதப்படிருப்பதில் முக்கியமானது. A.R. ரஹ்மானுக்கு அந்த பெயரை வைத்தவரே இவர்தான் என அண்டபுழுகு புழுகியிருக்கிறார்.

திலிப் குமாராக இருந்த அவருக்கு அல்லா ரக்கா ரஹ்மான் (A.R.ரஹமான்) என பெயரிட்டவர் இஸ்லாத்தை சேர்ந்தவர் என்பதை யாரவது அவரிடம் கூறுங்களேன். இதே போன்று தான் முன்பு சென்னை மாநகரப் பேருந்துகளில் எம்ஜியார் முதல்வரவார் என பல வருடங்களுக்கு முன்பே சுறியவர் என ஒரு சோதிடர் விளப்பரபடுத்தியிருந்தார்.

இது போன்று பொய்களை, மக்களின் அறியாமை மற்றும் பேராசையை பயன் படுத்தி இது போன்று கொள்ளையடிக்கும் சோதிடர்கள் பலர் பெருகிவிட்டார்கள். இவர்களிடம் சிக்கி சின்னா பின்னாமாகாமல் உங்களையும் உங்கள் பர்ஸையும் பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்.

சோதிடம் என்பதே புரட்டு இதில் பல பரட்டுகளை சொல்லி மக்களை ஏமாற்றும் இந்த சோதிடர்களை மக்கள் ஒரு நாள் புரட்டு புரட்டு என புரட்டாமலா போய்விடுவார்கள். கிரகங்கள் மனிதனின் வாழ்கையில் மாறுதல்களை உண்டாக்கும் என கூறியே மக்களை ஏமாற்றுகிறார்கள். தங்களுக்கு ஏற்படும் மாற்றங்களியே கிரகங்களால் தடுக்கவோ மாற்றவோ முடியாத போது அதுவா மனிதர்களின் வாழ்கையில் மாற்ரத்தை உண்டுபன்ன போகிறது.

இந்த கொடுமையில் கிளி சோசியம், எலி சோசியம் என பல சோசியங்கள். ராஜா என்ற சின்ன பெயரில் பல a க்களை சேர்த்து ஐந்தடி தூரத்திற்க்கு மாற்றிவிடுவார்கள். இவர்கள் Raaaaaaaaaaaaajaaaaaaaaaaaa என எழுதும் போது காமடியாகத்தான் இருக்கும். என்ன செய்வது ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாறுபவன் இருக்கத்தான் செய்வான். நம்மதான் சூதனாமா இருக்கனும் மக்கா.



edit post

3 Reply to "டகால்டி சோதிடர்,"

அமுதா கிருஷ்ணா on Monday, August 24, 2009 5:13:00 AM

எல்லா மதத்தினரும் ஜோதிடம், நியூமராலஜி என்று பார்க்கிறார்கள். வெளியே தெரிவதில்லை. திலீப் குமார் மதம் மாறியது கூட ஒரு நம்பிக்கையில் தானே. எனவே, இவர் பெயர் கூட மாற்றி இருக்கலாம். யாருக்கு தெரியும் இது பொய் என்று.

 

ஷாகுல் on Monday, August 24, 2009 5:51:00 AM

அக்கா அமுதா அவர்களே,

எல்லா மத்திலும் சிலர் சோதிடம் பார்க்கத்தான் செய்கிறார்கள் நான் இல்லை என சொல்லவில்லை. நான் சொல்வது ஏன் பொய்யான தகவலை தந்து ஏமாற்றாவேண்டும் என்பதுதான்.

நம்பிக்கை வைத்தால்தான் திலிப் குமார் மதம் மாறினார்.

 

Anonymous on Tuesday, August 25, 2009 2:44:00 AM

vidungappa