Your Ad Here

Views

பள்ளி படிப்பு முழுவதும் தமிழ் வழி கல்விதான் என்றாலும் கல்லூரியில் ஆங்கில வழிக் கல்விதான். படிப்பு முடித்து வேலை தேடும் போது, வேலையில் என அனைத்து கடித்தப் போக்குவரத்தும் ஆங்கிலத்தில் தான். பின்னர் துபாய் சென்றதும் தமிழ் எழுதுவது என்பது அறவே இலாமலாகிவிட்டது. தொலைப்பேசி, இனைய அரட்டை என பல வழிமுறைகள் இருப்பதால் பெற்றோர்களுக்கு கடிதம் எழுதுவது கூட கிடையாது. பள்ளி இறுதித் தேர்வு முடிந்ததும் தமிழ் எழுதுவதை விட்ட நான் இங்கு வந்துதான் தமிழில் தட்டுகிறேண். அதுக்கு என்னன்றீங்களா?

ஒண்ணும் இல்ல. இப்படி டச்சே இல்லாம போனதுனால நான் தட்டுற தமிழில் எழுத்துப் பிழைகள் ஏராளம். அதனால ஆங்கிலத்தில் எழுத்துப் பிழைகளை காட்டும் spell checker போன்று தமிழ் எழுத்துப் பிழைகளை காட்ட இது போன்று spell checker இருக்கிறதா? நானும் முயன்று பார்த்து விட்டேன் கிடைத்து எதுவும் உருப்படியாக இல்லை. உருப்படியாக இருந்தாலும் நம்ம கலப்பையை ஏற்று கொள்ள மறுக்கிறது. அதனால் நல்ல வேலை செய்ய கூடிய தமிழ் spell checker இருக்கிறதா இருந்தா சொல்லுங்க பாஸ்.

இதுல ஏதாவது எழுத்துப் பிழை இருந்தா சொல்லுங்க மக்கா




edit post

3 Reply to "உங்ககிட்ட இருக்கா பாஸ்?"

ஷாகுல் on Monday, September 28, 2009 5:02:00 AM

யாருகிட்டயும் இல்லயா?

 

செந்தழல் ரவி on Monday, September 28, 2009 5:49:00 AM

எங்கிட்ட இல்லை. ஆர்க்குட்ல இருக்கறத யூஸ் பண்ணுங்க.

இல்லைன்னா நீங்களே ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம எழுத கத்துக்கோங்க ஹி ஹி

 

ஷாகுல் on Monday, September 28, 2009 5:58:00 AM

வாங்க ரவி,

//இல்லைன்னா நீங்களே ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம எழுத கத்துக்கோங்க ஹி ஹி//

அதுக்குதாங்க முயற்சி பன்னிகிட்டு இருக்கேன்.