Views
எதிர்பார்ப்போடு பார்த்த உன்னை போல் ஒருவன் பொசுக்கென்று ஆகிவிட்டது. A Wednesday ஆர்ப்பாட்டமில்லாத அட்டகாசமான படம் நஸ்ருதீன் ஷா மற்றும் அனுபம் கேர் ஒவ்வொரு காட்சியிலும் ஒருவர்யொருவர் முந்துவார்கள். குறிப்பாக முதல் காட்சியில் காவல் நிலையத்தில் குண்டு வைக்க வரும் நஸ்ருதின் ஷா அனுவளவும் பதட்டப் படாமல் காவல் அதிகாரியிடம் பேசுவார். இடையே கழிவறை எங்கு இருகிறது என மிக சாதரணமாக கேட்பார். ஆணால் கமல் தன்னுடைய பர்ஸ் தவறியதாக சொல்லிக் கொண்டிருக்கும் போது மிக அவசரமாக டென்சனாக டாய்லட் எங்கு இருக்கிறது என கேட்கிறார். ஏண் பதட்டப் பட வேண்டும் குண்டு வைக்க வருபவன் பதட்டத்துடன் தான் இருப்பான் என்பதை காட்டவா?

கமலின் அடையாளத்தை காவல் துறை அதிகாரி சொல்லும் போது தாடிவைத்திருந்தார், கையில் வெங்கடாசலபதி பை வைத்திருந்தார் என்றவுடன் சிலுவை அனிந்திருந்தாரா என கேட்கும் இடத்தையும் தவிர்த்திருக்கலாம். ஒரு தீவிரவாதி 2002ல் குஜராத்தில் நடைபெற்ற முஸ்லீகளுகெதிரான திட்டமிட்ட கலவரத்தில் எரிக்கப்பட்ட பெஸ்ட் பேக்கரியில் மனைவியை பறிகொடுத்ததால் 1998ல் கோவையில் குண்டு வைத்ததாக சொல்கிறார். இங்கு வனகர்த்தா, இயக்குனர் மற்றும் கமல் போன்றோர் யோசிக்கவில்லை என தெரிகிறது. என்ன கொடுமை சார் இது?.
ஒன்னு போனா என்ன இன்னும் இரண்டு இருக்குல்ல என்பன போன்ற வசனங்களை தவிர்த்திருக்கலாம். இதன் மூலம் சொல்ல வருவது என்ன அந்த தீவிரவாதியின் குரூர எண்ணத்தை காட்டவா அல்லது மனைவியை எரித்து விட்டார்களே என்ற பார்வையாளனின் பச்சாதாபம் அந்த தீவிரவாதிக்கு கிடைக்க கூடாது என்பதற்காகவா? அல்லது ஹிந்தியை நாங்கள் அப்படியே காப்பி அடிக்க வில்லை என காட்டவா? ஒன்னுமே புரியல.
மேலும் அந்த டிவி நிருபரை போலிசுக்கு ஆதரவாக செயல்படுமாறு மோகன்லால் Negotiate பண்ணும் போது உடனடியாக ஒத்துக் கொள்வார் அதற்க்காக காத்திருந்ததைப் போல். ஆனால் A Wednesday ல் அனுபம் கேர் கேட்கும் போது அந்த டிவி நிருபர் தன் தரப்பு நியாயங்களை கூறி மறுப்பார் அனுபம் கேர் கஷ்டபட்டு தன் வழிக்கு கொண்டு வருவார். நம்ம தமிழ் நிருபர் கமிஷனரின் முன்பாகவே புகை பிடிக்க முயல்வார் பொது இடத்தில் புகைபிடிப்பது தண்டனைக்குறிய குற்றம் என்பது ஊடகத்தில் பனிபுரியும் அவருக்கு தெரியாதா? பின்னர் அந்த நிருபர் காவல் துறைக்குஒத்துழைக்க சம்மதித்தப் பிறகு புகைபிடிக்க அனுமதி தருகிறார் கமிஷனர். அதாவது பொது இடத்தில் புகை பிடிப்பது குற்றம். குற்றமே என்றாலும் போலிசுக்கு தள்ள வேண்டியதை தள்ளினால் செய்யலாம் என்கிறாரா? (எப்பூடி கண்டுபிடிச்சோம்). அந்த பாத்திரம் அதுதாங்க கேரக்டர் தம்மடித்துத் தான் ஆக வேண்டுமா?. திரைக்கதை அமைப்பாளர் கவனித்து இருக்கலாம்.
எதற்க்காக தான் இதை செய்கிறேன் என common man விவரிக்கும் போது, குஜராத் கலவரத்தில் ஒரு கர்பமாக இருந்த முஸ்லீம் சகோதரியை கொன்று அவரின் வயிற்றை கீறி குழந்தையை எடுத்து தீயிலிட்டு கொளுத்தியதை நினைவுபடுத்தும் போது அவர் மட்டுமல்ல நம்மையும் கலங்க வைகிறார்.
மற்றபடி தமிழுக்கு முழுவதும் புதுமையான கதை திரைக்கதை விறுவிறுப்பான களம் மற்றும் கமல் மற்றும் மோகன் லாலின் அருமையான நடிப்பு என தூள் கிளப்பியிருகிறார்கள். அந்த சேது மற்றும் ஆரிப் கேரக்டர் Good performance என நான் சொல்ல தேவையில்லை.
கமல் பாஸிஸ்ட் என பல பதிவுகள் சுற்றியது இங்கு. என்னை கேட்டால் அவர் ஒரு வியபாரி கடையில் எதை வைத்தால் மக்கள் மொய்ப்ப்பர்கள்என தெரிந்து வைத்திருகிறார். எனக்கு அவர் திரையுலகின் அம்பானியாகத்தான் தெரிகிறார். படத்தை சக்ரி இயக்கியிருகிறாரம். சக்ரி கமலை இயக்கினாரா அல்லது சக்ரியை கமல் இயக்கினாரா? ஸ்ருதியின் இசையும் கலக்கியிருகிறது.
A Wednesday ரீமேக்கில் கமல் நடிகிறார் என தெரிந்தவுடன் கண்டிபாக ஹிந்தியை விட பெட்டராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை மேற்கூறிய சிறு சிறு தவறுகளால் சிதறடித்திருகிறார். ஒரே ஒரு ஆறுதல் இதில் விஜய் மற்றும் ரித்தீஸ் நடிக்கவில்லை என்பதுதான்.
அந்த கம்ப்யூட்டர் ஹேக்கர் சொல்லுவார் he is brainy but மேதை இல்லை.
வழிமொழிகிறேன்.






11 Reply to "ஏமாற்றிய கமல்"
அபுஅஃப்ஸர் on Tuesday, September 29, 2009 5:22:00 AM
நீங்களுமா?
விமர்சனம் நல்லாயிருக்கு
பதிவுலகத்தையே இந்த படம் புரட்டிப்போட்டு சாதனைபடைத்துவிட்டது
ஷாகுல் on Tuesday, September 29, 2009 6:32:00 AM
நம்பளும் நீரோட்டத்துல கலந்துப்போம்.
வருகைக்கு நண்றி அபுஅஃப்ஸர்.
U.P.Tharsan on Tuesday, September 29, 2009 9:36:00 PM
கருத்தே இல்லாத சில நடிகர்களின் படங்களை விட... சில கருத்துக்கள் தவறாக இருக்கும் ஒரு கருத்துள்ள படம் சிறந்தது என்பது எனது எண்ணம்.
r.selvakkumar on Tuesday, September 29, 2009 10:41:00 PM
ரஜினி, கமல் ஆகிய இருவரது எல்லா படங்களும் ஏமாற்றம் அளிப்பது போலவே இருக்கும். ஏனென்றால் இருவரிடமும் நாம் படத்துக்குப் படம் அளவுக்கு அதிகமாக எதிர்பார்ப்போம். அவர்களும் ஏமாற்றாமல் தந்துகொண்டுதான் இருக்கிறார்கள். இல்லையென்றால் முப்பது ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் இருவரும் முண்ணனியில் இருக்க முடியாது.
Chandru on Tuesday, September 29, 2009 11:34:00 PM
""முதல் காட்சியில் காவல் நிலையத்தில் குண்டு வைக்க வரும் நஸ்ருதின் ஷா அனுவளவும் பதட்டப் படாமல் காவல் அதிகாரியிடம் பேசுவார். இடையே கழிவறை எங்கு இருகிறது என மிக சாதரணமாக கேட்பார். ஆணால் கமல் தன்னுடைய பர்ஸ் தவறியதாக சொல்லிக் கொண்டிருக்கும் போது மிக அவசரமாக டென்சனாக டாய்லட் எங்கு இருக்கிறது என கேட்கிறார். ஏண் பதட்டப் பட வேண்டும் குண்டு வைக்க வருபவன் பதட்டத்துடன் தான் இருப்பான் என்பதை காட்டவா?""
Oru Common man, Kundu veikumpodhu pathatra paduvathu saathiyam.. periya thavaraaga enaku Theriyavillai Nanbare !!
Pollathavan on Wednesday, September 30, 2009 12:40:00 AM
ஒரே ஒரு ஆறுதல் இதில் விஜய் மற்றும் ரித்தீஸ் நடிக்கவில்லை என்பதுதான்
Theyva Ilatha Comments!!
ஷாகுல் on Wednesday, September 30, 2009 2:36:00 AM
@U.P.Tharsan,
எனது என்னமும் அதுதான். அந்த தவறை திருத்தி இருக்கலாம் என்பதுதான் என் ஆதங்கம்.
@r.selvakkumar
அதேதான்.
@chandru
சரி நன்பரே
பொல்லாதவன்,
படத்தில் முதல் காட்சியில் 'டாக்டர்'வருவார் கவனீத்தீர்களா?
வருகைக்கு நண்றி
கலையரசன் on Wednesday, September 30, 2009 4:50:00 AM
கொஞ்சம் லேட் விமர்சனம்தான். இருந்தாலும்,
நான் நினைத்ததை கரைக்டா சொல்லியிருக்கீங்க சாகுல்!
ஷாகுல் on Wednesday, September 30, 2009 4:57:00 AM
நான் படம் பார்த்தே கொஞம் லேட்தான் வருகைக்கும் கருத்துக்கும் நண்றி கலையரசன்.
Vijay on Wednesday, September 30, 2009 6:16:00 AM
ஒரே ஒரு ஆறுதல் இதில் விஜய் மற்றும் ரித்தீஸ் நடிக்கவில்லை என்பதுதான்
Really nice comment
Vijay on Wednesday, September 30, 2009 6:17:00 AM
ஒரே ஒரு ஆறுதல் இதில் விஜய் மற்றும் ரித்தீஸ் நடிக்கவில்லை என்பதுதான்
really nice comment
Leave a Comment
Post a Comment