Your Ad Here

யார் இவன்? (10)

7:21 AM by , under ,

Views

"அல்ஹம்துலில்லாஹ்"

"என்னடா சொல்ற தும்மும் போதுலாம் இதையே சொல்ற"

"இறைவனுக்கு நண்றி சொல்கிறேன்"

"ஏண்?"

"தும்மும் போது இதயம் ஒரு வினாடி நின்றுவிடுகிறது, அதை மீண்டும் துடிக்க வைத்த இறைவனுக்கு நண்றி சொல்கிறேன்"

"அப்படியா?"

முஸ்தபாவும் சுரேசும் சிறுவயது முதல் நன்பர்கள் அந்த நட்பு கல்லூரிவை தொடர்ந்தது. இன்று கல்லூரியின் இறுதி நாள்
farewell கொண்டாட்டங்களை முடித்து விட்டு வீட்டிற்க்கு செல்ல ஆயத்தமாயினர்.

"முஸ்தபா போலாமாடா?'

"கொஞ்ம் வெய்ட் பன்னு கால் தூங்கிருச்சி"

"ஒரு நாளைக்கு எத்தன தடவடா கால் தூங்கும்? எப்போ பாத்தாலும் கால் தூங்கிருச்சினு சொல்ற" அப்போதுதான் அதை கவனித்தான் சுரேஷ்

"என்னடா உன்ன்னுடைய கன்ணு ஒரு எடத்துல நிக்காம அங்கும் இங்குமா ஓடிக்கிட்டு இருக்கு?"

"ஆமாண்டா! அதுவே involentry ஆ move ஆகுதுடா"

"உன் கை வேற அடிக்கடி நடுங்குது சீகிரமா டாக்டரை போய் பாரு"

"ஆமாண்டா கைல வேற அப்பப்போ ஏதோ ஊர்வது மாதிரி இருக்குடா. சரிடா வா போலாம்"

இருவரும் அவரவர் வீட்டிற்க்கு சென்றனர். தேர்வுகள் முடிந்து சுரேசுக்கு பெங்களூரில் வேலை கிடைக்க அங்கு சென்றான். முஸ்தபா வேலைக்காக முயன்று கொண்டிருந்தான்.

ஒரு நாள் காலையில் படுக்கையில் இருந்து எழுந்தவன் நிற்க்க பேலன்ஸ் இல்லாமல் கீழே விழுந்தான். எழ முயற்சித்தான் முஸ்தபா முடியவில்லை.

"அம்மா" என்று அலறினான்.

உடனடியாக மருத்துவமனைக்கு அழித்து செல்லப்பட்டான். சோதித்து பார்த்த மருத்துவர் ஒரு பெரிய மருத்துவமனைக்கு செல்ல பரிந்துரைத்தார். அவனுடைய இடது கால் செயலிழந்து விட்டது. உடனடியாக அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டான். பரிசோதனைகள் செய்யப்பட்டன. மருத்துவர் அவனுக்கு ஏற்ப்பட்ட நோயை கூறியதும் குடும்பமே ஆடிப்போய்விட்டது.

Multiple Sclerosis இதுதான் நோயின் பெயர். நோயாளியின் தண்டுவடத்தை பாதிக்கும் இந்நோய் நோயாளியின் ஒவ்வொறு உறுப்பாக செயலிழக்க செய்து கடைசியில் மனிதனை நடை பினமாக அல்ல அல்ல கிடைபினமாக ஆக்கிவிடும். இறுதியில் மரணம். கொடுமையிலும் கொடுமை இந்நோய் கண்டுபிடித்து 120 ஆண்டுகளாகியும் இதுவரை மருந்து கண்டுபிடிக்க படவில்லை என்பதுதான், கை கால்கள் அடிககடி மரத்து போவது கை கால்களில் எறும்பு ஊர்வது போண்ற உணர்வுகள் ஏற்ப்படுவது, கருவிழி அங்குமிங்கும் அனிச்சையாக அலைபாய்வது, அடிக்கடி ஏற்ப்படும் தசை பிடிப்பு போன்றவை இதன் அறிகுறிகளாகும். இது யாரை வேண்டுமானாலும் தாக்கலாம்.




முஸ்தபா பெற்றோர்களுக்கு ஒரே மகன் அவனது தந்தை சிறு மளிகை கடை வைத்து குடுப்பத்தை நடத்திவந்தார். இப்போது யார் மேல் நம்பிக்கை வைத்தார்களோ அவனே இன்று முடமாக படுக்கையில். என்ன செய்வது மருத்துவ செலவுக்கே மாதம் இருபதாயிரம் ரூபாய் வேண்டும். கஷ்டப்பட்டு மருத்துவம் செய்தார்கள். அழுதார்கள் தெழுதார்கள் ஏனோ எதற்க்கும் பலனில்லை. நாள் ஆக ஆகஅவனுடைய ஒவ்வொரு உறுப்பாக செயலிழக்க ஆரம்பித்தது. இதை கேள்விப்பட்ட சுரேஷ் துடித்துவிட்டான். பார்த்தான் அழுதான் சென்றான் அவனாலும் தான் என்ன செய்யமுடியும்.

சில மாதங்களில் சுரேசுக்கு திருமணமானது முஸ்தபாவால் அதற்க்கும் செல்ல முடியவில்லை காரனம் அப்போது அவனுடைய இடுப்பு வரை செயலிழந்து இருந்தது. தனது வாழ்த்துக்களை தொலைபேசியில் தெரிவித்துக் கொண்டான்.

சில வருடங்கள் கழித்து உடலின் அனைத்து பாகங்களும் செயலிழந்து மரணத்தை எதிர்நோக்கி இருந்தான் முஸ்தபா. அவனுடைய கண் மட்டுமே அங்கும் இங்கும் அலையும் அவனிடம் எந்த சலனமும் இருக்காகது. மருத்துவமனையில் தான் வைதிருந்தார்கள். மரணப்படுக்கையில் இருக்கும் நன்பனை பார்க்க சுரேஷ் தன் இருசக்கர வாகனத்தில் புறப்பட்டான். விதி வலியது. அவனுடைய வாகனம் விபத்துக்குள்ளாகியது.

முஸ்தபாவை வைத்திருந்த மருத்துவனனையில் தான் அவனும் அனுமதிக்கப்பட்டான். சுரேசிடம் எந்த சலனமும் இல்லை. மூளை செயலிழந்து விட்டது இனி அவன் நினைவு திரும்ப வழியில்லை.

இரு நண்பர்கள் செயலிழந்த நிலையில் மருத்துமனையில். முஸ்தபாவின் முடிவு இப்படிதான் இருக்கும் என சில வருடங்களுக்கு முன்னமே தெரிந்து விட்டபடியால் அவனின் பெற்றோர்கள் மனதளவில் எதற்க்கும் தயாராக இருந்தனர். ஆணால் சுரேஷ் சற்று முன் கூட நண்றாக இருந்தவன் யாரும் எதிர்பார்க்கவில்லை. சுரேசின் ஆறு மாத குழந்தை கூட எதற்க்கு அழுகிறோம் என தெரியாமல் அழுது கொண்டு இருந்தது.

மருத்துவமனையின் தலைமை மருத்துவருக்கு ஒரு வினோதமான யோசனை வந்தது. முஸ்தபாவிற்க்கு மூளையை தவிர அனைத்து உறுப்புகளும் முற்றிலுமாக செயலிழந்து விட்டது. சுரேசுக்கு மூளையை தவிர மற்ற அனைத்து உறுப்புக்களும் நல்ல நிலையில் உள்ளன. மூளை மாற்று அறுவை சிகிசை.

இதுவரை இதயம் உட்பட உடலின் பல பாகங்கள் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு மற்றப்பட்டிருக்கிறது ஆணால் மூளை. மாற்ற முடியுமா?

மூளை என்பது ஒரு முழுமையான திடப் பொருளல்ல அது ஐஸ்கிரிம் உருண்டையை போன்றது. கைவைத்தாலே கொழ கொழவென ஆகிவிடும். அப்படிபட்ட மூளையை மற்ற முடியுமா? முயன்று பார்ப்போம். இதற்க்கு இரு குடும்பங்களும் சம்மதிக்க வேண்டுமே?

இரு குடும்பங்களையும் அழைத்த மருத்துவர் அவர்களிடம் தன் திட்டத்தை கூறினார். முஸ்தபா இன்னும் இரண்டு நாளோ அல்லது மூன்று நாளோ அதனால் அவனுடய பெற்றோர்கள் சம்மதித்துவிட்டனர். தன் மகன் கிடைக்கலாம் என சுரேஷின் பெற்றோர்களும் சம்மத்திதனர். ஒரு சுபமுகூர்த்த சுபதினத்தில் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிக்கப்பட்டது. ஆச்சரியம் அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்தது. அறுவை சிகிச்சை முடிந்து முஸ்தபாவின் உடல் பெற்றோர்களிடம் கொடுக்கப்பட்டது. நினைவு தெளியாத சுரேஷ் தீவிர கண்கானிப்பின் கீழ் வைக்கப்பட்டான்.

ஒரு மாதம் வரை சுயநிலைவு இல்லமல் இருந்தான் அவனுடைய காயங்கள் அனைத்து குணமாகிவிட்டது ஆணால் சுயநினைவு இன்னும் வரவில்லை. மருத்துவருக்கு தன்னுடைய சோதனை தோல்வியில் முடிந்ததென முடிவுகட்டி அவனுடைய உடல் பாகங்களை எடுத்து தேவையானவர்களுக்கு அனுப்ப ஏற்ப்பாடு செய்யப்பட்ட்து. அப்போது ஒடிவந்த ஒரு செவிலியர்.

"டாக்டர் பேஷண்ட் கை கால்களை அசைக்கிறார்" என்றதும் மருத்துவர் அலறி அடித்துக் கொண்டு ஒடினார்.

ஆம் அவன் கை கால்களை அசைத்தவாறு ஏதோ புலம்பிக்கொண்டிருந்தான். அவனை இன்னும் சிரத்தையாக பார்துக் கொண்டார் மருத்துவர். சில நாட்களில் நினைவு திரும்பியது சுரேசுக்கு. முழுமையாக நினைவு திரும்பிய சுரேஷை மருத்துவர் பரிசோதித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று தும்மியவன் கூறினான்

"அல்ஹம்துலில்லாஹ்"

யார் இவன்?



edit post

10 Reply to "யார் இவன்?"

உலவு.காம் ( புதிய தமிழ் திரட்டி ulavu.com) on Thursday, October 01, 2009 3:48:00 AM

கதை மிக அருமை

தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் தோழா

 

ஷாகுல் on Thursday, October 01, 2009 3:59:00 AM

வருகைக்கு நண்றி உலவு

 

கலையரசன் on Thursday, October 01, 2009 5:33:00 AM

கதை சுவாரசியம்.. நிஜமா நடந்தது போல எழுதியிருந்தீர்கள்!

 

ஷாகுல் on Thursday, October 01, 2009 5:54:00 AM

வருகைக்கும் கருத்துக்கும் நண்றி கலையரசன்

 

நையாண்டி நைனா on Thursday, October 01, 2009 7:14:00 AM

kathai arumai...

 

ஷாகுல் on Thursday, October 01, 2009 7:20:00 AM

வருகைக்கும் கருத்துக்கும் நண்றி நை.நை

 

அபுஅஃப்ஸர் on Thursday, October 01, 2009 9:12:00 AM

கதையின் ஓட்டத்தில் உண்மையான நோயின் காரணத்தையும் கொடுத்து சொன்ன விதம் அருமை, உயிருள்ள கதையோட்டம், தொடருங்கள்

 

ஷாகுல் on Thursday, October 01, 2009 9:21:00 AM

வருகைக்கும் கருத்துக்கும் நண்றி அபுஅஃப்ஸர்

 

Hussainamma on Tuesday, October 06, 2009 4:48:00 AM

நோயைக் குறித்த விளக்கங்கள் கூறியிருந்தது சிறப்பு!!

அப்புறம் ஒரு விஷயம், //நண்றி// அல்ல, நன்றி!!

வாழ்த்துக்கள்.

 

ஷாகுல் on Tuesday, October 06, 2009 6:56:00 AM

வருகைக்கு நன்றி Hussainamma