Your Ad Here

Views


தலைப்பை பாத்து மிரளாதீர்கள் போக்கிரியில் விஜய் சொல்லும் "நான் ஒரு வாட்டி முடிவு பன்னிட்டா" அந்த டயலாக்கோட ஹிந்தி வெர்ஷன் தான் அது.

பிரபு தேவா இயக்கிய முதல் ஹிந்தி படமான Wanted ல் (போக்கிரி ரீமேக்) சல்மான் கான் அறிமுகமாகும் போது இப்படிதான் பன்ஞ் டயலாக் சொல்லி அறிமுகமாகிறார். மொத்தமே படத்தில் இரண்டு முறைதான் சொல்கிறார். ஒன்று அறிமுகத்தின் போது மற்றொன்று படம் முடியும் போது. தமிழைப் போல அடிக்கடி சொல்லி வெறுப்பேத்தவில்லை. அப்படியே தமிழில் உள்ளதை போலவே எடுத்திருக்கிறார்கள் எந்த மாற்றமுமில்லாமல். அறிமுகப்பாடலில் பிரபு தேவா வந்து ஆடுகிறார். ஆடிக்கொண்டு இருக்கும் போது போன் வருகிறது. யாரு நயன் போன் பன்னிருப்பாங்களோ?

ஒரே ஒரு மாற்றம் பிரகாஷ் ராஜின் பெயர் மாற்றப்பட்டிருப்பதுதான். தமிழில் அலிபாய் ஹிந்தியில் கனி பாய்.படத்தில் காமடி என்று எதுவும் இல்லை சிங்கி மங்கி கேரக்ட்டருக்கு யாரும் அகப்படவில்லையா? ஐயோ வடை போச்சே மிஸ்ஸிங். நம்ம வடிவேலையே நடிக்க வைத்திருக்கலாம். காமடிக்காக தமிழில் போலிஸ் துரத்திக் கொண்டு வரும் ஒருவர் வடிவேலுவிடம் அன்னே போலிஸ் கேட்டா எதும் சொல்லாதீங்கன்னு சொல்லிட்டு ஓடுவாரே அந்த காட்சியை அப்படியே சுட்டு வைத்திருக்கிறார்.

ஆயிஷா டாக்கியா தான் இதில் அசின் வேலையை பார்த்திருக்கிறார், அதாவது ஹிரோயின் பரவாயில்லை. அந்த வில்லன் இன்ஸ்பெக்டர், ஹீரேயின் தம்பி, கமிஷன்ர் என எல்லாம் அப்படியே தமிழில் உள்ளது போலதான். சல்மான் கான் மாற்றம் எதுவும் சொல்லவில்லையா?

சல்மான் கான் உடை கூட அப்படியே தளபதியின் காஸ்டியூமை போலவே உள்ளது. கிளைமேக்ஸில் போலிசு வேசம் சல்மான் கானுக்கு நன்றாகப் பொருந்துகிறது. சண்டையில் சல்மான் சட்டையை கழற்றிவிட்டு சண்டை போடுவார். நல்ல வேளை தமிழி பிரபு தேவா இதைப் போன்று சீன் வைக்க வில்லை.

போலிஸ் உடையில் தளபதியை பார்க்கும் போது அப்படியே வாட்ச்மேன் மாதிரியே இருப்ப்பார் என்ன செய்ய?

இசை, ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு போன்றவற்றை தியேட்டரில் படம் பார்த்தவர்களிடம் கேட்டு கொள்ளுங்கள். நான் டிவிடியில் தான் பார்த்தேன், கொஞ்சம் டல்லாதான் தெரிந்தது.



edit post

6 Reply to "மே ஏக் பார் கமிட்மெண்ட் கர்த்தீத்தி................"

கலையரசன் on Wednesday, October 07, 2009 8:54:00 AM

மே ஏக் பார் கமிட்மெண்ட் கர்த்தீத்தி....மே பீச்சே நை ஆட்டேகா!!

ஆப்கோ காம் நகிஹே?

 

ஷாகுல் on Wednesday, October 07, 2009 8:59:00 AM

//ஆப்கோ காம் நகிஹே?//

மேரா கோய் காம் நஹிஹே. எய் மேரா காம். ஆப் கைசே?

 

Sasikumar on Wednesday, October 07, 2009 11:58:00 AM

"போலிஸ் உடையில் தளபதியை பார்க்கும் போது அப்படியே வாட்ச்மேன் மாதிரியே இருப்ப்பார் என்ன செய்ய?"
I am impressed with those words

 

ஷாகுல் on Thursday, October 08, 2009 1:54:00 AM

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சசிகுமார்

 

நையாண்டி நைனா on Thursday, October 08, 2009 3:55:00 AM

Nice one. I love it.மே ஏக் பார் கமிட்மெண்ட் கர்த்தீத்தி....
ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

 

ஷாகுல் on Thursday, October 08, 2009 4:23:00 AM

நைனா,

ஏக் பார் என்பது டாஸ்மாக் பார் இல்ல

ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

வருகைக்கு நன்றி