Your Ad Here

Views


அந்த காலத்தில் கிராமங்களில் காலை உணவாக பழைய சோறு சாப்பிடுவது வழக்கம். அந்த வழக்கம் தற்ப்போது கிராமங்களில் கூட கான முடிவதில்லை. நாம் சிறு வயதில் சாப்பிட்டிருப்போம். இப்போது பழைய சோறு சாப்பிடுவது தகுதி குறைவாக பார்க்கப்ப்டுகிறது. பிச்சைக்காரன் கூட வாங்க மாட்டேன் என்கிறான். அப்படிதான் எங்கள் வீட்டில் ஒரு நாள் மதிய உணவை முடித்து விட்டு மீதம் இருந்த சாத்திற்க்கு தண்ணிர் உற்றி வைத்து விட்டோம் , சிறிது நேரத்தில் ஒருவர் தனக்கு பசிகிறது ஏதாவது சாப்பிட கொடுங்கள் என கேட்க எங்க அம்மா அவரிடம் இப்போதான் தண்ணிர் ஊற்றினேன் குழம்பு ஊற்றி கொண்டு வரவா அல்லது தண்ணிரோடு சாப்பிடுகிறீர்களா என கேட்க தண்ணி ஊத்தியாச்சா நான் பழைய சோறு சாப்பிட மாட்டேன் எனக்கு வேண்டாம் என கூற, இப்போதான் ஊற்றினேன் பழைய சோறு இல்ல என எடுத்து கூறியும் அவர் எனக்கு வேண்டாம் என நடையை கட்டிவிட்டார்.

அப்போதே அப்படி என்றால் இக்காலத்தில் சொல்லவே வேண்டாம். பழைய சோறு என்றாலே காத தூரம் ஓடுகிறோம். ஆணால் அதில் தான் வைட்டமீன் பி6 மற்றும் பி12 அதிகமாக உள்ளது. தவிரவும் சிறு குடலுக்கு நன்மை செய்யும் பாக்டிரியாக்கள் ட்ரில்லியன் கணக்கில் இருக்கிறதாம். இது நமது உணவுப்பாதையை ஆரோகியமாக வைத்திருகிறதாம். உணவுப்பாதை சீராக இருந்தால் அவுட்லெட்டும் சீராகிவிடும். காலையில் கழிவறயில் மல்லு கட்ட வேண்டாம். இதனுடன் இரண்டு சிறிய வெங்காயம் சேர்த்து உண்டால் அபரிமிதமான நோய் எதிற்ப்பு சக்தி கிடைகிறதாம். காய்சால் பேன்ற நோய்களிடம் இருந்து காக்கிறது பண்றி காய்ச்சல் உட்பட.

காலை உணவாக பழைய சாத்தை உண்டால் உடல் லேசாகவும் சுறு சுறுப்பாகவும் இருக்கும். இரவிலே தன்னிர் ஊற்றி வைப்பதால் லட்சக்கணக்கான நல்ல பாக்டிரியாக்கள் உருவாகிறது. மறு நாள் இதை குடிப்பதால் உடல் சூட்டை தணிப்பதோடு குடல் புண், வயிற்று வலி போன்றவற்றை குணப்படுதும். அதுமில்லாமல் இதில் இருக்கும் நார் சத்து மலச்சிக்கல் இல்லமல் காலையில் ஃபிரியா போலாம். இதனை தொடர்ந்து சாப்பிட்டால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்து உடல் எடையும் குறந்துவிட்டதாக அமெரிக்காவில் வசிக்கும் இந்திய விஞ்ஞானி பிரதீப் கூறுகிறார்.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து உடலை சோர்வின்றி வைக்க உதவுகிறது. அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சரியாகிவிடுகிறது. அல்சர் உள்ளவர்கள் இதை சாப்பிட்டு வந்தால் மிக விரைவில் குண்மாகிவிடும். எல்லாவற்றிர்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதால் எந்த நோயும் வராம்ல் உடல் ஆரோக்கியமாகவும் இளமையாகவும் இருக்கும்.

அதனாலதான் நம்ம ஆளுங்க ஒரு சட்டி பழைய சாதம் சாப்பிட்டு விட்டு மாலை வரை வயலில் வேலை செய்யமுடிந்திருகிறது போலும். காலையில் சாண்ட்விச், பீட்ஸா, பர்கர் என கழித்து திரியும் தமிழ் மக்களே இன்றிலிருந்து பழைய சோறு சாப்பிட்டு நோயிலிருந்து பாதுகாப்பு பெறுவோம். அப்புறம் பழைய சாதம் செய்ய தெரியுமா? (என்ன கொடுமை சார் இது எதுகொல்லாம் கிளாஸ் எடுக்க வேண்டியாத இருக்கு) பொங்குன சோத்துல தண்னிய ஊத்திட்டு அடுத்த நாள் கலைல திறந்து பாருங்க கம கம என பழைய சோறு தயார். இதற்க்கு கைகுத்தல் அரிசி சிறந்தது. நம்ம வீட்டல் போய் கைகுத்தல் அரிசியில் சோறு பொங்க சொன்னால் நம்க்குதான் குத்து கிடைக்கும் என அஞ்சுபவர்கள் ஒரு ரூபாய் அரிசி கூட உபயோக்கலாம். சூடான சாததில் தண்னிர் ஊற்ற கூடாது. ஆறிய பின்பு மண்டட்டியில் போட்டு தண்னிர் ஊற்றி மறு நாள் காலையில் சிறிது மோர் கலந்து சின்ன வெங்காயத்துடன் சாப்பிட்டால் ஜில்லென்று இருக்கும். மதியம் வரை பசிக்காதாம்.

டிஸ்கி 1 : இவ்வளவு சொல்லுறிய நீ என்ன பழைய சோறா சாப்புடுற என நீங்கள் கேட்பது தெரிகிறது. என்ன செய்ய நங்க தான் பல வருடங்களுக்கு முண்பே ஃபாரினர்ஸ் ஆயிட்டோம்ல.

டிஸ்கி 2: என்னடா பழைய சோறைப் பற்றி எழுதிவிட்டு புதுச் சோறு படம் பேட்டுருக்கானேனு பாக்குறிங்களா. என்ன செய்றதுங்க பழைய சோறு படம் கிடைகுமா என கூகிள் தேடிப் பாத்தா இது தான் கிடைத்தது. கவலை வேண்டாம் உங்கள் மானிட்டரில் தண்னிர் ஊற்றி விட்டு நாளை காலையில் மோர் மற்றும் சின்ன வெங்காயத்துடன் வந்து பாருங்கள் பழைய சாதமாக மாறி இருக்கும். என்ன சரியா?



edit post

9 Reply to "பழைய சோறு!!!"

கலையரசன் on Wednesday, October 14, 2009 7:44:00 AM

நான் நினைச்சேன் நீங்க எழுதிட்டீங்க பாஸ்! அருமை!!

 

ஷாகுல் on Wednesday, October 14, 2009 7:53:00 AM

வாங்க கலை.

//நான் நினைச்சேன் நீங்க எழுதிட்டீங்க பாஸ்! அருமை//

அப்பிடனா நம்ம இருவருக்கும் பிசிக்ஸ் கெமிஸ்ட்ரி ஒத்து போகுதோ?

 

நையாண்டி நைனா on Wednesday, October 14, 2009 8:16:00 AM

Do u know? I am a big fan of "palaya soru".

 

Monks on Wednesday, October 14, 2009 8:27:00 AM

எல்லா வகையிலும் கலந்து கட்டுறீங்க,
'அனுஷ்கா திலகம்' பட்டம் குடுத்துரலாமா?

 

அபுஅஃப்ஸர் on Wednesday, October 14, 2009 8:34:00 AM

ரெண்டு பீர் பாட்டில் க்கு சமம் ஒரு சட்டி பழைய சோறுனு சொல்லுவாங்க அவ்வளவு சூட்டை தனிக்குமாம்

காலேஜ் படிச்ச வரைக்கும் பழைய சோறு விரும்பி சாப்பிடுவேன்

இப்போவெல்லாம் வெளிநாட்டு வாசியாகிவிட்டதாலே பழைய பரோட்டாதான் கிடைக்குது இங்கே

ஊருக்கு போனா கூட கஷடப்பட்டு வாரேனு சொல்லு ஒரு விருந்தே வைக்கிறாங்க

என்னாத்த செய்யுறது

நல்ல பதிவு ஷாகுல்

 

ஷாகுல் on Wednesday, October 14, 2009 8:35:00 AM

வாங்க நையாண்டி நைனா,

//Do u know? I am a big fan of "palaya soru"//

பெரிய ஃபேனா நல்லா காத்து வருமா?

 

ஷாகுல் on Wednesday, October 14, 2009 8:39:00 AM

வாங்க Monks,

//எல்லா வகையிலும் கலந்து கட்டுறீங்க,//

நன்றிங்க

//அனுஷ்கா திலகம்' பட்டம் குடுத்துரலாமா?//

உடனடியா ஒரு விழாவுக்கு ஏற்ப்பாடு பன்னுங்க. நீங்க ஆசை படுறீங்க எதுக்கு தடுப்பானேன்.

 

ஷாகுல் on Wednesday, October 14, 2009 8:43:00 AM

வாங்க அபுஅஃப்ஸர்,

//ஊருக்கு போனா கூட கஷடப்பட்டு வாரேனு சொல்லு ஒரு விருந்தே வைக்கிறாங்க //

பழைய சோறு கேட்டீங்கனா ஏற இறங்க நல்லா பாப்பாங்க. சாப்பட்டு விசயத்தில் கூட states பாக்க ஆரம்பிச்சிட்டாங்க என்ன செய்ய.

//நல்ல பதிவு ஷாகுல்//

நன்றி அபுஅஃப்ஸர்.

 

சேரல் on Monday, November 23, 2009 3:22:00 AM

இப்போது, வீட்டுக்குப் போகும் நாட்களில் மட்டும் பழைய சோறு கிடைக்கும். அது தனி திருப்திதான் ;)

-ப்ரியமுடன்
சேரல்