இந்த இடுகையின் இணைப்புகள்
இந்த இடுகையின் இணைப்புகள்
அதிலும் குறிப்பாக முஸ்லிம் பெண்கள் அணியும் ஹிஜாப் எனும் பர்தா, நாகரீகம் என்ற பெயரில் எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் அரை-குறை ஆடை அணிந்து வலம் வருபவர்களிடையே மிகுந்த எரிச்சலைத் தோற்றுவித்து வருகிறது. சமீபத்தில் பிரெஞ்சு அதிபர் சார்கோஸி, பர்தாவின் மீதான தன் அதீத காழ்ப்புணர்வைக் கொட்டியதும் அதனைத் தொடர்ந்து, இந்திய உச்சநீதிமன்றத்தாலேயே மோசமானவர் என பட்டம் வழங்கப்பட்ட பால்தாக்கரே தன் வெறுப்பை உமிழ்ந்ததும் உலகம் கண்டது.
இந்த வரிசையில் வெறுப்பின் உச்சகட்டமாக, ஹிஜாப் அணிந்த ஒரே காரணத்திற்காக 31 வயதான மர்வா ஷெர்பினி என்ற முஸ்லிம் சகோதரி ஒருவர் ஜெர்மனியில் பொது இடத்தில் பலர் முன்னிலையில் கொடூரமான முறையில் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். மனதை உலுக்கும் கொடூரமான இச்சம்பவம் ஜெர்மனியின் ட்ரெஸ்டன் நகரில் நடந்துள்ளது. இந்தக் கொடூரக் கொலையைச் செய்த ஆக்ஸெல் என்பவரை போலிசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
நீதிமன்றத்தில் நீதிபதிகளும் மேலும் பலரும் கூடி இருந்த போது அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கொடூர சம்பவத்தில் தனது மனைவியைக் காக்கப் போராடிய மர்வாவின் கணவரான எல்வி ஒகஸ்-வும் கடுமையாக தாக்கப்பட்டு மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார். ஜெர்மனியின் செய்தி ஊடகங்கள் தரும் தகவலின் படி, ஷெர்பினியின் கணவரான ஒகஸ் கொலைகாரனால் கடுமையாகத் தாக்கப்பட்டதாகவும் இதனைத் தடுப்பதற்காக முன் வந்த போலிஸ்காரர் ஒருவரின் துப்பாக்கிக்குண்டு பாய்ந்து அவர் படுகாயம் அடைந்தார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2008ம் வருடத்தில், தான் ஹிஜாப் அணிவதைக் கண்டு தன்னைப் "பெண் தீவிரவாதி" என ஆக்ஸெல் என்பவர் தொடர்ந்து கூறித் தொல்லை கொடுத்து வந்ததை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார் ஷெர்பினி. இந்த வழக்கு ஏற்கனவே எகிப்து மற்றும் ஜெர்மனி மட்டுமின்றி சர்வதேச அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது.
இச்சூழலில் வழக்கின் முடிவு வெளியானது. அதில் ஷெர்பினியை அவமதித்த குற்றத்திற்காக 750 யூரோக்கள் ($1,050) அபராதமாகச் செலுத்தும்படி ஆக்ஸெலுக்கு ஜெர்மனி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆக்ஸெல், இது தொடர்பாக அபராதம் செலுத்த நீதிமன்றம் வந்தபோது ஆத்திரம் தலைக்கேறி பலர் முன்னிலையில் ஷெர்பினியை குத்திக் கொலை செய்தார்.
தொடர்ந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு மருத்துவர்கள் கடுமையாகப் போராடியும் ஷெர்பினியின் உயிரைக் காக்க முடியவில்லை. இவர் படுகொலை செய்யப்படும்போது மூன்று மாத கருவைத் தன் கருப்பையில் சுமந்தவராக இருந்தார் என்பதும் ஏற்கனவே மூன்று வயதுள்ள ஒரு குழந்தைக்குத் தாய் என்ற உருக்கமான செய்தியும் வெளியாகியுள்ளது. நீதிமன்றத்திலேயே அதுவும் தனது மூன்று வயது மகனின் கண்ணெதிரேயே இவர் படுகொலை செய்யப் பட்டுள்ளார்.

கொலைகாரனான 28 வயதான ஆக்ஸெல், ஜெர்மனியில் உள்ள முஸ்லிம்கள் மீது கடுமையான காழ்ப்புணர்ச்சி கொண்டவராவார் என்று ஜெர்மன் குற்றவியல் வழக்கறிஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இச்செய்தி எகிப்து துவங்கி உலகம் முழுவதும் தீயாய் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹிஜாப் அணிந்த ஒரே காரணத்திற்காக அநியாயமாக ஒரு பெண்ணின் மீது அவதூறு/ பழி சுமத்திய ஒருவரை ஜெர்மனிய சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, அவர் மீது வழக்குத் தொடர்ந்து வெற்றி பெற்ற ஒரு பெண் இவ்வாறு கொலை செய்யப் பட்டிருப்பது மிகவும் அநீதியான செயல் என்று இதனைக் கண்டித்து கண்டனங்கள் உலகம் முழுவதும் எழுந்துள்ளது.
இஸ்லாத்தில் இறைவனின் கட்டளையை ஏற்று ஹிஜாப் அணிந்து பேணுதலான முறையில் வாழ்ந்த ஒரே காரணத்திற்காக இப்பெண் படுகொலை செய்யப் பட்டிருப்பதால் இவர் வீரமரணம் அடைந்த வீராங்கனை என்று எகிப்திய மக்கள் அழைக்கின்றனர். அத்துடன் ஜெர்மனியில் தலைவிரித்தாடும் இஸ்லாமோஃபோபியா தொடர்பான செயல்களை எதிர்த்துத் தமது கண்டனங்களைப் பரவலாக தெரிவித்து வருகின்றனர்.
"கொலைகாரனான ஆக்ஸெல் ஏற்கனவே ஷெர்பினியை அடிக்கடி சீண்டி தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தார் என்றும் அவரது ஹிஜாபை வலுக்கட்டாயமாக பறித்து அதனைக் கிழிக்க முயற்சிகள் செய்தார் என்றும் ஷெர்பினியின் தங்கையான அதாரிக் அல் ஷெர்பினி எகிப்திய செய்தி ஊடகங்களில் தெரிவித்துள்ளார். மேலும் ஷெர்பினியின் கணவர் இத்தொல்லைகள் தொடர்பாக ஜெர்மனியின் உள்ளூர் காவல் நிலையத்தில் ஏற்கனவே புகார் கொடுத்திருந்ததையும் சுட்டிக்காட்டினார்.
ஷெர்பினி ஹிஜாப் அணிவதால் அவருக்குப் பிரச்னைகள் ஏற்படும் என்றும் இதன் மூலம் அவரது உயிருக்கு ஆபத்துகள் வரும் என்றும் பல கொலை மிரட்டல்கள் ஏற்கனவே வந்துள்ள போதிலும் அதனை அலட்சியப் படுத்தி தொடர்ந்து அணிந்து வந்தார்" என ஷெர்பினியின் குடும்ப நண்பரும் அலெக்ஸாண்டரியா பல்கலைக் கழகத்தின் இயற்பியல் துறைப் பேராசிரியரானருமான ஹிஷாம் அல் அஸ்ஹரி தெரிவித்தார். மேலும் "இஸ்லாத்தைப் பின்பற்றுவதால் தன் உயிரை இழக்க நேரிடலாம்!" என்பதை ஷெர்பினி அறிந்து வைத்திருந்தார் என்றார் பேராசிரியர் ஹிஷாம்.
கடந்த 5-7-2009 இல் படுகொலை செய்யப்பட்ட ஷெர்பினி மர்வாவின் ஜனாஸா(உடல்) அவரது சொந்த நாடான எகிப்துக்குக் கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது என்பதை பெர்லினில் உள்ள எகிப்தியத் தூதரகம் அறிவித்துள்ளது. 35 இலட்சம் முஸ்லிம்கள் வசிக்கும் ஜெர்மனியில் ஹிஜாப் தொடர்பான இத்தகைய நிகழ்வுகள் அடிக்கடி நடந்து கொண்டிருக்கின்றன என்பதும் ஜெர்மனின் பல மாநிலங்களின் பள்ளிகள் தம் ஆசிரியைகள் ஹிஜாப் அணியத் தடை விதித்துள்ளன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
ஜெர்மனியில் இஸ்லாமோஃபோபியா தலை விரித்தாடுகிறது என்பது மீண்டுமொரு முறை சகோதரி மர்வாவின் வீரமரணத்தின் மூலம் நிரூபணமாகியுள்ளது என்பது கவலைக்குரிய உண்மையாகும்.
தீவிரவாதம், பயங்கரவாதம் என்ற பெயரில் ஏற்கெனவே உலகம் முழுவதும் முஸ்லிம்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்நேரத்தில், தான் விரும்பும் ஆடையை அணிவதற்குக் கூட முஸ்லிம் பெண்களுக்குச் சுதந்திரமில்லை என்ற ரீதியில் இஸ்லாமோஃபோபியா எனும் நோய் பரவி வருவது அதிர்ச்சியளிக்கக் கூடியதாகும். இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்களின் மீதும் தொடர்ந்து வரும் இஸ்லாமோஃபோபியாவினால் விளைந்த இத்தகைய வன்முறை தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை, உலக முஸ்லிம்கள் உடனடியாக ஒன்றிணைந்து எடுக்க வேண்டியது கட்டாயமாகும்.
- அபூ ஸாலிஹா
நண்றி : சத்தியமார்கம் இனயதளம்
இந்த இடுகையின் இணைப்புகள்




(படம் பெரியதாக தெரிய படத்தின் மேல் கிளிக் செய்ய வேண்டாம். படத்தின் அளவே அவ்வளவுதான்)
வந்தது வந்துட்டீங்க அப்படியே நாலு பின்னூட்டம் போட்டுட்டு போங்க.
இந்த இடுகையின் இணைப்புகள்
சென்னை தி.நகரில் இயங்கும் ட்ரைஸ்டார் ஹௌஸிங் பி லிட்(Tristar Housing Pvt Ltd) என்ற நிறுவனம் சொத்துக்கள் குறித்து ஆலோசனைகள் வழங்குவதோடு, அவற்றைப் பராமரிப்பதிலும் வாடிக்கையாளர்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறது. இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு. பீட்டர் அவர்களை சந்தித்தோம்.
George Peter“நாம் வாங்குகிற சொத்துக்களை உரிய வகையில் பதிவு செய்தல் மிகவும் அவசியம். பொதுமக்களில் பலருக்கு அந்த விழிப்புணர்வு இருப்பதில்லை. பல சொத்துப்பிரச்சினைகளுக்கு இது மூலகாரணமாக
அமைந்துவிடுகிறது” என்கிறார் பீட்டர்.
இது குறித்து பல நுணுக்கமான தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார். அவருடனான ஒரு பயனுள்ள நேர்காணல் இதோ:
சொத்து வாங்கும்போதோ அல்லது விற்கும்போதோ அரசாங்கத்தின் எந்தெந்தத் துறைகளை நாம் அணுக வேண்டும்?
மாநில அரசின் பதிவுத் துறை (Registration Department)யும், வருவாய்த் துறை (Revenue Department)யும், சொத்துப் பரிமாற்றத்தில் சம்பந்தப்படும். சொத்து வாங்கியபின் இவ்விரு துறைகளிலும் உரிமையாளரின் பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும்.
பதிவுத் துறையில் நாம் செய்ய வேண்டிய கடமைகள் என்ன? சொத்து சம்பந்தமாக அந்தத் துறை பராமரிக்கும் விவரங்களைப் பற்றிக் கூறுங்களேன்.
நாம் கிரையப் பத்திரம் (Sale Deed) செய்யும் சார்பதிவாளர் அலுவலகம் (Sub-Registration Office), பதிவுத் துறை (Registration Department)யின் கீழ் வருகிறது. இங்கு நாம் மற்றவரிடம் இருந்து இடம் வாங்கும்போது அதற்காக அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலையில் 8% முத்திரை தீர்வையாகவும் மற்றும் 1% பதிவுக் கட்டணமாகவும் செலுத்துகிறோம்.
ஆகவே, நாம் இடம் வாங்குவதற்கு அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய தொகையைச் செலுத்தவும் மற்றும் நிலம் விற்பவரும் வாங்குபவரும் சார்பதிவாளர் முன்னிலையில் கிரையப் பத்திரத்தில் கையொப்பம் இடவும் சார் பதிவாளர் அலுவலகம் செல்ல வேண்டி இருக்கிறது.
இந்தத் துறையின் பதிவேட்டில் ஒருவரிடம் இருந்து மற்றவர் இந்த இடத்தை வாங்கி இருக்கிறார்; அதற்கான பத்திர எண் இது என்ற விபரம் மட்டுமே இருக்கும். நிலத்தின் உண்மையான உரிமையாளர் யார் என்பது பற்றி இந்தத் துறை அக்கறை கொள்வதில்லை என்பது குறிப்பிடத்தகுந்த விஷயம். இதை முக்கியமாக மனதில் கொள்ள வேண்டும்.
அப்படியானால் உரிமையாளர் பெயரை எங்கே மாற்றம் செய்ய வேண்டும்?வருவாய்த் துறை (Revenue Department)யில்தான் நிலத்திற்கான விவரங்கள் அனைத்தும் இருக்கும். பட்டா (Patta), சிட்டா (Chitta), அடங்கல் (Adangal), 'அ' பதிவேடு (‘A' Register), நிலத்திற்கான வரைபட எல்லை (FMB) என ஐந்து வகையான பதிவேடுகளை இந்தத் துறை பராமரிக்கிறது.
நிலத்தின் உரிமை நமக்குத்தான் இருக்கிறது என்பதற்கான ஆதாரம்தான் பட்டா என்பது. ஒரு நிலத்தின் உரிமை யாருக்கு என்பதை முடிவு செய்வதே பட்டாவை வைத்துத்தான். அதில் மாவட்டத்தின் பெயர் மற்றும் ஊரின் பெயர், பட்டா எண், உரிமையாளர் பெயர் போன்ற விவரங்களுடன், புல எண்ணும், உட்பிரிவும், (Survey Number and Subdivision), நன்செய் நிலமா அல்லது புன்செய் நிலமா என்னும் விவரமும், நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வையின் விவரங்களும் இருக்கும்.
ஒரு தனி நபருக்கு குறிப்பிட்ட கிராமத்தில் எவ்வளவு நிலம் இருக்கிறதென்று அரசாங்கம் வைத்திருக்கும் பதிவேடுதான் சிட்டா என்பது. இதில் சொத்தின் உரிமையாளர் பெயர், பட்டா எண்கள், நிலம் நன்செய் அல்லது புன்செய் பயன்பாடு, தீர்வை கட்டிய விவரங்கள் எல்லாம் இருக்கும்.
ஒரு கிராமத்தில் இருக்கிற மொத்த சர்வே எண்கள் அடங்கிய பதிவேடுதான் ‘அடங்கல்' என்பது. இதில் குறிப்பிட்ட சர்வே எண்ணுக்கு உரிய நிலம் யார் பெயரில் இருக்கிறது, பட்டா எண் மற்றும் நிலத்தின் பயன்பாடு என்ன போன்ற விவரங்கள் இதில் இருக்கும்.
'அ' பதிவேட்டில் (‘A' Register) கீழ்க்கண்ட விபரங்கள் இருக்கும்:
1. பழைய நில அளவை எண், உட்பிரிவு எண், (Survey Number and Subdivision)
2. ரயத்துவாரி(ர), சர்க்கார் (ச), அல்லது இனாம் (இ),
3. நன்செய் (ந), புன்செய் (பு), மானாவாரி (மா), தீர்வு ஏற்படாத தரிசு (தீ.ஏ.த), புறம்போக்கு,
4. பட்டா எண் மற்றும் பதிவு பெற்ற உடைமையாளரின் பெயர்,
5. நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வை, போன்ற அனைத்து விவரங்களும் இருக்கும்.
நிலத்திற்கான வரைபட எல்லை (FMB) இடம் எவ்வாறு பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது என்பதைக் காட்டுகிறது. நிலங்கள் ஏதாவது ஒரு கிராமத்தின் கீழ் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு எண் கொடுக்கப்படும். அதுவே சர்வே எண் என்பது. நம் கிரையப் பத்திரத்தில் சொத்து விவரம் (Schedule) பகுதியில் நம்முடைய இடம் எந்த சர்வே எண்ணில் வருகிறது என குறிக்கப்பட்டிருக்கும்.
இவை அனைத்திலுமே உரிமையாளர் பெயர் மாற்றப்பட வேண்டும் என்பது மனதில் கொள்வது மிகவும் அவசியம்.
இதில் இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றனவா! சரி.. வருவாய்த் துறையில் நம்முடைய ஆவணங்களைப் பெயர் மாற்றம் செய்யத் தவறிவிட்டால் என்னவாகும் என்பதைப் பற்றியும் கொஞ்சம் விளக்கமாகக் கூறுங்களேன்.
பட்டா பெயர் மாற்றம் செய்யாவிட்டால் வருவாய்த் துறையின் ஆவணங்களின் படி நீங்கள் உரிமையாளர் அல்ல. பட்டா யார் பெயரில் இருக்கிறதோ அவர்தான் உரிமையாளர். ஒரு வேளை அரசாங்கம் நம்முடைய நிலத்தை கையகப்படுத்தினால், அதற்கான இழப்பீட்டுத் தொகை பட்டா யார் பெயரில் இருக்கிறதோ அவர்களுக்கு வழங்கப்படும்.
நீங்கள் பட்டா பெயர் மாற்றம் செய்யவில்லை என்பதை உங்களுக்கு இடத்தை விற்றவர் தொரிந்து கொண்டால் அவர் பெயரில் வரி செலுத்தி விடுவார். மேலும் அடங்கல் அவர் பெயருக்கு ஒவ்வொரு வருடமும் வாங்கி வைத்துக் கொள்வார். அடங்கல் அவர் பெயரில் இருந்தாலே அவர்தான் அதனைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பது உறுதியாகி விடும். நாம் வேறொருவருக்கு விற்பனை செய்யும்போது இது பிரச்சினையைக் கொடுக்கும். எனவே, நம் இடத்தை கிரையப் பத்திர மூலம் பதிவு செய்து வாங்கி விட்டோம், எல்லாம் முடிந்துவிட்டது என இருக்கக் கூடாது. உடனே பட்டா பெயர் மாற்றம் செய்து வருவாய்த் துறையின் அனைத்து பதிவேடுகளையும் நமது பெயருக்கு மாற்றம் செய்ய வேண்டும்.
பலரது கனவான சொத்துக்கள் வாங்குவது சம்பந்தமான பல உபயோகமான தகவல்களை மிக விளக்கமாகக் கூறினீர்கள். மிக்க நன்றி!
பீட்டர் அவர்களின் ஆலோசனை பெற விரும்புவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம்: 0091 44 2431 2431
நன்றி: நிலாச்சாரல்
இந்த இடுகையின் இணைப்புகள்
முதல் பகுதியை படிக்க
இடம் : துபாய் சர்வதேச விமான நிலையம்.
எப்படியோ துபாய் வந்து சேர்ந்த விஜய் தன்னுடைய சுமைகளை எடுத்துக் கொள்ள விரைகிறார். அவசர அவசரமாக ஒரு தள்ளு வண்டியில் நான்கைந்து பேக்குகளை ஏற்றிக்கொண்டிருக்கும் போது அங்கு வந்த சக பயனி
சக பயனி : சார் அது என்னோட பேக்கு
விஜய் : யோவ் எத்தன பேக்கு கெடக்கு உனக்கு எது வேனுமோ எடுத்துக்கோ. நான் எடுத்தத எதுக்கு கேக்குற.
சக பயனி : ங்கொய்யால! கோயில் வாசல்ல தேங்கா பொறுக்குறதுன்னு நெனச்சியா. ஒழுங்கா பேக்க குடுடா.
எவ்வளவோ சொல்லியும் விஜய் கேட்காததால் வந்திருந்த கூட்டமே ஒரு காட்டு காடியது. உடனடியாக விஜய் மூர்சையானார்.சுயநினைவு வந்ததும் சுற்றும் முற்றூம் பார்த்த விஜய் தன் சுமைகளுக்கு அருகே ஒரு பாக்கிஸ்தானி அமர்ந்திருப்பதை பார்த்தவர்.
விஜய் : நான் எங்க இருக்கேன்.
பாக்கி : மதினத் ஜீமைரால மல்லாக்க படுத்துகிட்டு மீன் புடிச்சிக்கிட்டு இருக்க. (பாக்கிஸ்தானி தமிழ் பேசுவான என நீங்கள் கேட்கலாம். எத்தன விஜயகாந்தின் படத்தில் வரும் பாக்கிஸ்தானி வில்லன்கள் எல்லாருமே தமிழில் தான் பேசுவார்கள் அதை பின்பற்றியே விஜய் படத்திலும் பாக்கிஸ்தானி தமிழில் பேசுகிறார்)

விஜய் : என் லக்கேஜ்லாம் பத்தரமா இருக்குல்ல
பாக்கி : டேய்! என்னடா லக்கேஜ் இது ரெண்டு சூட்கேசு புல்லா மார்க்ஷீட்தான் வச்சிருக்க.
விஜய் : ஆமாங்கனா, கஷ்டப்பட்டு படிச்சது
பாக்கி : படுத்தாதடா எதாவது தேரும் நெனச்சி உன்ன ஏர்போர்ட்ல இருந்து இங்க வரைக்கும் தூக்கிட்டுவந்து உன் பேக்க பாத்தா மூனு வருஷ கோர்ஸ முப்பது வருசமா படிச்சி இத்தன மார்க்சீட்டு வச்சிருக்கியே உனக்கு எவண்டா வேலை குடுப்பான்.
விஜய் : இந்தியால எவனும் வேலை குடுக்கலனு தான் இங்க வந்துருக்கேன்.
பாக்கி : மவன இனி எங்காவது உன்ன பாத்தேன் அப்புறம் தாண்டி உனக்கு இருக்குது என்று எச்சரித்து விட்டு செல்கிறார்.
விஜய் : நமக்கு நேரமே சரி இல்லயோ போரவன் வாரவனுல்லாம் காட்டு காட்டுனு காட்றான்.
துபாயில் தன் கல்லூரி நன்பனை கான விரைகிறார் நமது தளபதி. நன்பனுக்கு தொலைபேசி இருக்கும் இடத்தை அடைகிறார்.
விஜய் : டேய்! எனக்கு ரூம் புக் பன்னிட்டியா. ஏசி தானே. ஏன்னா ஏசி இல்லாம் என்னால இருக்க முடியாது.
நன்பன் : ஏசி தான் வா வா
பேசிக்கொண்டே நன்பனின் இல்லத்த அடந்த தளபதி
விஜய் : இவ்ளோ பெரிய வீட்லயாட நீ இருக்க?. மச்சி நீ உன்மையிலே பெரிய ஆளுடா.
நன்பன் : லூசு அது ரினைன்சன் ஹேட்டல். அதுக்கு பின்னாடிதான் நம்ம வீடு இருக்குது வா
நன்பனின் வீட்டை கண்டதும் அதிர்சியடையும் விஜய் அந்த அதிர்ச்சி மாறாமல்
விஜய் : என்னடா இது பத்துக்கு பத்து ரூமல் பத்து பேரு இருக்கீங்க.
நன்பன் : இங்க வந்து என்ன தாஜ்மஹாலா கட்டமுடியும். ஏற்கனவெ பத்து பேர் இருக்காங்க உன்னயோட சேத்து 11 பேரு.
விஜய் : ஏசி ?
நன்பன் : ஏசி இங்க இருக்கு அந்த சுவிட்ச போடு
விஜய் : ஏசில இருந்து சத்தம் மட்டுந்தான் வருது.
நன்பன் : கொஞ்ச நேரம் கழிச்சி காத்து வரும்.
விஜய் : பாத்ரூம் ?
நன்பன் : அங்க இருக்கு பாரு. டிகிரி பாஸாயிட்டியா?
விஜய் : போன மாசந்தான் பாஸானேன். உடனே இங்க வந்துட்டேன்.
நன்பன் : என் மகனையும் அடுத்த வருசம் அந்த காலஜ்லதான் சேக்கனும் ஆமா எதுக்கு நீ இப்போ துபாய் வந்துருக்க?
விஜய் : அது ஒரு லட்சியம் டா அந்த லட்சியத்த அடைறவரைக்கும் நான் இங்க இருந்து போக மாட்டேன்.
நன்பன் : என்னடா லட்சியம்?
தன் லட்சியத்தை சொல்ல ஆரம்பிக்கிறார்.
அது என்ன லட்சியம் - அடுத்த பாகத்தில்
__________________________________________________________________
Madinat Jumaira - துபாயில் ஜீமைரா பீச்சில் அம்மைந்திருக்க கூடிய ஒரு ஐந்து நட்சத்திர விடுதி.
இந்த இடுகையின் இணைப்புகள்
'கொலகொலயா முந்திரிக்கா' விளையாட்டு வீரர் வீராங்கனைகளே உங்களுக்கு Sports கோட்டாவில் MBBS சீட் கிடைக்கும் வாய்ப்பு (4)
4:05 AM by ஷாகுல் , under செய்தி
'செபக் தக்ரா' என்ற ஒரு விளையாட்டுப் பிரிவின் கீழ் கார்த்திக் அபிநயா என்ற மாணவர்களுக்கு மருத்துவ படிப்பிற்க்கான சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் செஸ், கேரம் உள்ளிட்ட உடல் உழைப்பில்லாத விளையாட்டுகளுக்கான ஒதுக்கீட்டின் கீழ் பல மாணவ, மாணவிகளுக்கு பொறியியலில் அதிக இடம் கிடைத்துள்ளது.
இந்நிலையில் கூடைபந்து, கால்பந்து, ஹாக்கி போன்ற விளையாட்டு வீரர்கள் அரசு உதவிப்பெறும் கல்லூரிகளில் மட்டுமே இடம் கிடைத்துள்ளது. ஒருவருக்கு கூட அன்னா பல்கலைகழகத்தில் இடம் கிடைக்கவில்லை. இதன் மூலம் மேற்கண்ட விலையாட்டு வீரர் வீராங்கனைகள் ஒதுக்கப்படுவதாக புகார் எழும்மியுள்ளது.
அதனால் கொல கொலயா முந்திரிக்க , டிக்கிலோனா போன்ற விளையாட்டு வீரர் வீராங்கனைகளே உங்களுக்கும் ஒரு வாய்ப்பு MBBS, பொறியியல் சீட்டு கிடைக்க.
மேலும் வாசிக்க : Thatstamil
இந்த இடுகையின் இணைப்புகள்
இளைய தளபதி விஜயின் 50வது படத்தின் கதை விவாதத்தின் போது வெளியே கசிந்து விட்டதாம். கதை முழுவதும் துபாயில் நடக்கிறதாம். அவருக்கு ஜோடியாக ஹிபா வஹ்பி நடிக்க வேண்டுமென விஜய் ஆசைப்படுகிறார். முதல் முறையாக இதில் விஜய் அப்பா, அன்னன், தம்பி என மூண்று வேடத்தில் நடிக்கிறார். கிளைமேஸில் போலிசாகவும் வருகிறார். அந்த கதை உங்களுக்காக கீழே கொடுக்கப்பட்டுள்லது.
சென்னை அன்னா பன்னாட்டு விமான நிலையத்தில் காட்சி ஆரம்பிக்கிறது.

வேகமாக வரும் விஜய் விமான நிலையத்திற்க்குள் நுழைய முயல்கிறார். அப்போது இடைமறித்த காவலாளி
காவலாளி : டிக்கட் காட்டுங்க.
(இதே போன்ற பாடல் இந்த படத்தில் இடம்பெறுகிறதாம்)
விஜய் : நான் டிக்கெட் ரிசர்வ் பன்னலங்னா பிளைட்ட்ல டிக்கெட் எடுதுக்குவங்னா.
காவளாளி : இன்னா பிளைட்ல எடுப்பியா? என்ன கேனனு நெனச்சியா? யாருய்யா நீ? எந்த ஊரு?
விஜய் : நீ எந்த ஊரு நான் எந்த ஊரு முகவரி தேவையில்ல,
நீ என்ன உறவு நான் என்ன உறவு
சொந்த்தில் அர்த்தமில்ல, தொப்புள்
கொடி உறவா? இல்ல இல்ல.
என அறிமுக பாடல் ஒண்று பாட நொந்து போன காவலாளி
காவலாளி : அய்யா தெரியாம கேட்டுடேன். டிக்கெட் எடுத்த மட்டுந்தா உள்ள போக முடியும்.
விஜய் : டிக்கெட் எடுக்குரதுக்குள்ள பிளைட் போயிடும்.
காவலாளி : இல்லீங்க அங்க கூட்டமா இருக்குல்ள அதுதான் எமர்ஜென்சி கவுண்டர் அங்க போனீங்கனா. உடனே டிக்கெட் கிடைக்கும்.
விஜய் கூட்டம் நின்ற இடத்தை நோக்கி சென்றதும் பெருமூச்சி விட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார் காவலாளி. கூட்டத்தை தள்ளி விட்டு
விஜய் : துபாய்க்கு அவசரமா ஒரு டிக்கெட் குடுங்க
அங்கு அமர்ந்திருப்பவர் : எவண்டா அவன் பப்ளிக் டாய்லட்ல வந்து துபாய்க்கு டிக்கெட் கேக்குறவன்.
விஜய் : நான் தாங்கனா. என்ன தெரியலயா?
அ.அ : தெரியாமத்தானடா கேக்குறேன். என அவர் கேட்டவுடன்.
வில்லு வில்லு வில்லு வில்லு வில்லேய் என கோரஸீடன் நடந்துவர டரியலாகிப் போனவர் தன் கைகாசை போட்டு டிக்கெட் வாங்கி கொடுக்கிறார்.
வெற்றிகரமாக டிக்கெட் வாங்கிய விஜயை அவர் நன்பர்கள் சந்திக்கிறார்கள்.
நன்பர் : டேய் நெஜமாவாட துபாய் போற. எதுக்குடா வேண்டாண்டா.
விஜய் : நான் ஒரு வாட்டி முடிவு பன்னிட்டா என் பேச்ச நானே கேட்க மாட்டேன்.
நன்பர் : எப்போடா திரும்பி வருவ
விஜய் : ரெண்டு வருஷமாகும். என விஜய் சொல்ல உடனே நன்பர்கள் சந்தோசத்தில் துள்ளிகுதிக்கிறார்கள்.
நன்பர்கள் கோரஸாக : இனி ரெண்டு வருஷத்துக்கு ஓசி டீ குடிக்க வரமாட்ட என சொல்ல கடுப்பான விஜய்
விஜய் : சைலன்ஸ்! பேசிக்கிட்டு இருக்கேன்ல என சொல்லிவிட்டு விமான நிலயத்திற்க்குள் நுழைகிறார்.
இந்த இடுகையின் இணைப்புகள்
நெடுந்தூரம் ரயில் பயணம் மேற்கொண்ட சர்தாருக்கு தூக்கம் கண்னை கட்டியது. இருந்தாலும் இறங்கும் இடத்தை தவறவிட்டு விட கூடாதென கஷ்டப்பட்டு விழித்திருந்தார்.அவரால் விழித்திருக்க முடியவில்லை சட்டென அவருக்கு ஒரு யோசனை வந்தது. அதன் படி தன்னுடன் பயணம் செய்யும் சக பயனியிடம் தன்னை குறிப்பிட்ட இடத்தில் இறக்கிவிட்டால் இருபது ரூபாய் தருவதாக சொனார்.
அவரும் சரியென ஒப்புக்கொண்டு பணத்தை வாங்கிக் கொண்டார். சர்தார் நிம்மதியாக துங்கியவுடன். பணம் வாங்கியவருக்கு தாம் சர்தாரிடம் இருபது ரூபாய் வாங்கியது அதிகமோ என என்னி அதிகப்படியான ரூபாய்க்கு எதாவது செய்ய வேண்டும் என யோசித்தவர் துங்கிக் கொண்டிருக்கும் சர்தாருக்கு முடிவெட்டி சவரம் செய்துவிடடார். பின்னர் சர்தார் சொன்ன இடம் வந்ததும்அவர் சர்தாரை எழுப்பி இறக்கிவிடார். நேராக வீட்டுக்கு சென்ற சர்தார் குளித்து முடித்து விட்டு கண்ணாடியை பார்த்த சர்தார் அதிர்சி அடைந்தவராக தன் மனைவியிடம் " ங்கொய்யால! துட்ட வாங்கிகிட்டு வேற யாரையோ எறக்கி விட்டுட்டான்"
____________________________________________________________________
தனது நன்பரின் வீட்டுக்கு விருந்துக்கு சென்ற சர்தாரிடம் அவர்து நன்பர் சர்தாரிடம்.
நன்பர் : வெரும் வயித்தில் எத்தனை இட்லி சாப்புடுவீங்க
சர்தார் : எட்டு இட்லீ சாபிடுவேங்க
நன்பர் : அது எப்படி ஒரு இட்லி சாப்பிட்ட உடனே வயிறு வெறும் வயிறாக இருக்காதே என்று சிரித்தார்.
இந்த ஜோக்கை தனது மனைவியிடம் சொல்ல வேண்டுமென வீட்டுக்கு சென்றார். நேராக மனைவியிடம் சென்று வெறும் வயித்தில் எத்தன இட்லி சாப்புடுவ என்றதுக்கு அவரது மனைவி ஆறு இட்லிங்க எண்றார் அதற்க்கு சர்தார் "லூசு எட்டு இட்லினு சொன்னீனா ஒரு ஜோக்கு சொல்லீருப்பேன் என்றாராம்.
__________________________________________________________________
மதில் சுவறேறி கடக்க முயன்ற சார்தாரிடம் காவலாளி "யோவ்! அதான் 'No Trespassing' அப்படினு போர்டு போட்டிருக்குள்ள எண்றதுக்கு
ஆங் ஜீ மே ட்ரெஸ்பா சிங் நஹி. மே தன்வீர் சிங் என்றார்.
_____________________________________________________________________
உடலெங்கும் கட்டுகளுடன் மருத்துவமனியில் சிகிச்சை பெற்று வந்த சர்தார் ஒருவரிடம் பக்கத்து படுக்கை நோயாளி
நோயாளி : எப்படிங்க உங்க உடம்பு முழுவதும் கட்டு போடும் படி அடிபட்டது
சர்தார் : ஒன்னுமில்லீங்க நானும் என் மகனும் பஸ்ஸில் பயனம் செய்தோம், இடம் கிடைக்காத்தாலாம் நின்று கெண்டிருந்தோம். அப்போது என் மகன் கையில் வைத்திருந்த போட்டோவை கீழே போட அது நோராக ஒரு பொன்னின் காலுக்கிடையில் விழுந்து விட அப்பென்னின் புடவை போடாவை மூடிவிட்டது. நான் அப்பென்னிடம் சென்று 'மேடம்! புடவையை தூக்குன்ங்க போட்டோ எடுக்கனும் என்றதுதான் தாமதம் பஸ்சில் இருந்த அனைவரும் புரட்டி எடுத்து விட்டார்கள்.
நோயாளி : ??????????????????
இந்த இடுகையின் இணைப்புகள்
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இஸ்லாத்தில் தன்னை இனைத்துக் கொண்ட ஜாக்கன் தன் பெயரை மீக்காயில் என மாற்றிக் கொண்டார். தன்னுடைய மரணத்திற்க்கு பிறகு இஸ்லாமிய முறைப்படியே தனது உடலை அடக்கம் செய்ய வேண்டும் என உயில் எழுதி வைத்துள்ளதாக X17 என்ற இனையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
அவரது உடல் தொடர் அறுவைசிகிச்சைகளால் வெகுவாக பாதிக்கப் பட்டிருப்பதால் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படுமா என்ற கேள்வி
ஏற்ப்பட்டுள்ளது. இதனிடையே ரசிகர்களின் அஞலிக்காக கலிபோர்னியாவில் உள்ள அவரது பன்னை வீட்டில் வைக்கப்படும் என்ற தகவலை அவரது குடும்பத்தினர் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.
இறைவன் அவருக்கு நற்கூலியை தரட்டும்.....................
Source: Webdunia
இந்த இடுகையின் இணைப்புகள்
வருகிற ஆகஸ்ட் 7 ம் தேதி எல்லோருக்கும் ஒரு ஆச்சர்யாம் காத்திருக்கிற்றது. என்னன்னா ஆகஸ்ட் 7 ம் தேதி நேரம் 1 2 3 4 5 6 7 8 9 என்று இருக்கும்.
12 மணி 34 நிமிடம் 56 வினாடி 7 ம் தேதி 8 ம் மாதம் 9 ம் வருடம் எல்லாத்துட்டயும் சொல்லி என்ன மாதிரி அவங்கள கடுப்படிங்க சரியா.
அப்போ நேரமும் தேதியும் கீழ்கண்டாவாரு எழுதப்படும்.
12:34:56 07/08/09
இது திரும்ப வரவே வராதாம். அதானே திருப்பி வந்தா 9 8 7 6 5 4 3 2 தான் வரும்.
இந்த இடுகையின் இணைப்புகள்
நேற்று காலை 6.30 மணிக்கு கத்தார் கடல் பகுதியில் 35 பேருடன் சென்று கொண்டிருந்த சரக்கு கப்பல் ஒண்று தோஹா கால்வாய் அருகே கவிழ்ந்தது. இதில் இந்தியாவை சேர்ந்த 16 பேரும் பலியானார்கள். உடனடியாக முடுக்கிவிடப்பட்ட மீட்பு பணியில் 5 பேர் உயிருடன் மீட்க்க்கப்பட்டனர்.. இதில் பாலகிருஷ்னன், ஜெய்சன், அப்புராவ் ஆகிய 3 பேர் இந்தியர்கள் ஆவார்கள்.
மற்ற இருவரில் ஒருவர் இந்தோநேசியாவையும் மற்றவர் பிலிப்பைன்ஸையும் சேர்ந்தவர். கடற்படை உள்ளிட்ட பல்வேறு படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஹெலிகாப்டர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.மீட்கப்பட்ட 5 பேரை தவிர அனைவரும் உயிரிலந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்ட்டுள்ளது.
விபத்து குறித்து இந்தியத் தூதர் தீபா கோபாலன் வாத்வா கூறுகையில், மொத்தம் 19 இந்தியர்கள் கப்பலில் இருந்துள்ளனர். 3 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மற்ற 16 பேரும் உயிரிழந்திருக்கலாம் என கருதுகிறோம் என்றார்.
நண்றி : Gulf-Times, Thatstamil.
இந்த இடுகையின் இணைப்புகள்








