இந்த இடுகையின் இணைப்புகள்
இந்த எஸ்எம்எஸை ஸ்மெல் பண்ணுங்க உங்களுக்கு கற்பூர வாசனை அடிக்கிறதா?
என்னது இல்லையா?
அதுசரி, சும்மாவா சொன்னாங்க "கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை"
Cycle ஓட்டினா அது Cyclining அப்படின்னா...Train ஓட்டினா அது training-ஆ?
இரத்த வங்கிக்குப் போனா இரத்தம் வாங்கலாம்....
ஆனா.... இந்தியன் வங்கிக்குப் போனா இந்தியா வாங்க முடியுமா
என்னதான் விடிய விடிய டிவி ஓடினாலும் ..... ஒரு இன்ச் கூட நகராது
___________________________________________________________________
பக்தர் : பூமி எதுக்கு இப்படி சுத்துது?
சுவாமி : ஒரு குவாட்டர் அடிச்சா மனுசனே சுத்தூம் போது 3 குவாட்டர் தன்னி உள்ள் பூமீ சுத்தாம என்ன செய்யும்.
டீச்சர்: முதல் மாதம் ஜனவரி இரண்டாவது மாதம் பிப்ரவரி
அப்போ பத்தாவது மாதம்?
மானவன் : பத்தாவது மாதம் டெலிவரி டீச்சர்.
மனைவி : உங்களுக்கு இப்படியே சமைத்து போட்டுட்டு இருந்தா என்ன கிடைக்கும்?
கனவன்: என்னுடைய இன்சுரன்ஸ் பாலிசி உனக்கு சீக்குரம் கிடைகும்.
______________________________________________________________________
ஒரு நாள் சர்தார் காதல் பட சிடி வாங்கி Freezer ல வச்சாரு எதூக்கு தெரியுமா?
அவருக்கு 'ஜில்லுனு ஒரு காதல்' பாக்கனுமாம்.
சென்னை அசோக் பில்லரிலிருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்திற்க்கு செல்லும் வழியில் ஒரு விளம்பரத்தை பாத்து திகைத்துதான் போனேன். அந்த விளம்பரபலகை இதுதான் திரு ஓம்ஜீ உலகநாதன் எனும் சோதிடர் வைத்திருக்கிறார். அதில் எழுதப்படிருப்பதில் முக்கியமானது. A.R. ரஹ்மானுக்கு அந்த பெயரை வைத்தவரே இவர்தான் என அண்டபுழுகு புழுகியிருக்கிறார்.
திலிப் குமாராக இருந்த அவருக்கு அல்லா ரக்கா ரஹ்மான் (A.R.ரஹமான்) என பெயரிட்டவர் இஸ்லாத்தை சேர்ந்தவர் என்பதை யாரவது அவரிடம் கூறுங்களேன். இதே போன்று தான் முன்பு சென்னை மாநகரப் பேருந்துகளில் எம்ஜியார் முதல்வரவார் என பல வருடங்களுக்கு முன்பே சுறியவர் என ஒரு சோதிடர் விளப்பரபடுத்தியிருந்தார்.
இது போன்று பொய்களை, மக்களின் அறியாமை மற்றும் பேராசையை பயன் படுத்தி இது போன்று கொள்ளையடிக்கும் சோதிடர்கள் பலர் பெருகிவிட்டார்கள். இவர்களிடம் சிக்கி சின்னா பின்னாமாகாமல் உங்களையும் உங்கள் பர்ஸையும் பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்.
சோதிடம் என்பதே புரட்டு இதில் பல பரட்டுகளை சொல்லி மக்களை ஏமாற்றும் இந்த சோதிடர்களை மக்கள் ஒரு நாள் புரட்டு புரட்டு என புரட்டாமலா போய்விடுவார்கள். கிரகங்கள் மனிதனின் வாழ்கையில் மாறுதல்களை உண்டாக்கும் என கூறியே மக்களை ஏமாற்றுகிறார்கள். தங்களுக்கு ஏற்படும் மாற்றங்களியே கிரகங்களால் தடுக்கவோ மாற்றவோ முடியாத போது அதுவா மனிதர்களின் வாழ்கையில் மாற்ரத்தை உண்டுபன்ன போகிறது.
இந்த கொடுமையில் கிளி சோசியம், எலி சோசியம் என பல சோசியங்கள். ராஜா என்ற சின்ன பெயரில் பல a க்களை சேர்த்து ஐந்தடி தூரத்திற்க்கு மாற்றிவிடுவார்கள். இவர்கள் Raaaaaaaaaaaaajaaaaaaaaaaaa என எழுதும் போது காமடியாகத்தான் இருக்கும். என்ன செய்வது ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாறுபவன் இருக்கத்தான் செய்வான். நம்மதான் சூதனாமா இருக்கனும் மக்கா.
எச்சரிக்கை : பயந்த சுபாவமுள்ளவர்கள் இதை பார்க்க வேண்டாம்.
இன்று காலையில் மின்னஞலில் கிடைத்த இந்த கண்னொளியை கண்டதும் பேரதிர்ச்ச்சி. ஆப்பிரிக்காவில் எதோ ஒரு இடத்தில் மனிதர்களை உயிருடன் எரிக்கிறார்கள் சிலர் அதை சுற்றி வேடிக்கை பார்க்கும் யாரும் அதை ஆட்சோபிக்க கூட இல்லை. இது எந்த நாட்டில் நடந்தது ந்தற்க்காக. இப்படி பகிரங்கமாக கொலைக்கு அந்த நாட்டு அரசு எந்த நடவடிக்கை எடுத்தது?
கீழே அந்த காட்சி
3:22 AM by ஷாகுல் , under மொக்கை
தற்போது சென்னைக்கு சென்ற நான் என் நன்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த போதுதான் எனக்கு அச்செய்தி எனக்கு தெரியவந்தது.
அதாவது என் நன்பனுக்கு நன்பன் ஒருவர் வில்லு படத்தை நான்கு முறை பாத்திருப்பதாக சொன்னார். நான் அப்படியே மலைத்துவிட்டேன்.
எப்படிங்க அந்த படத்தை பாத்தீங்க என கேட்க.
நான் தன்னியடிச்சிட்டு வீட்டுக்குப் போனால் கண்டுபுடிச்சிருவாங்க அதனால எதாவது ஒரு படத்துக்கு போய்டு வந்துடுவேன். வாந்தி வந்தா கூட அங்கயே எடுத்துருவேன். அப்படினு சொன்னாரு.
அப்படி அவர் பார்த்ததாக சொல்லும் படங்களும் அவற்றின் எண்ணிக்கையும்.
வில்லு - 4 முறை
குருவி - 2 முறை
ஏகன் - 3 முறை
மரியாதை - 3 முறை
சபரி - 2 முறை
இன்னும் பல படங்கள் உள்ளது நினைவிலிருந்தை ம்ட்டும் குறிப்பிட்டிருக்கிறேன்.
இந்த மாதிரி படம் பாத்தா அடிச்சது கூட எறங்கிருமய்யா?
