Your Ad Here

யார் இவன்? (10)

7:21 AM by , under ,

"அல்ஹம்துலில்லாஹ்"

"என்னடா சொல்ற தும்மும் போதுலாம் இதையே சொல்ற"

"இறைவனுக்கு நண்றி சொல்கிறேன்"

"ஏண்?"

"தும்மும் போது இதயம் ஒரு வினாடி நின்றுவிடுகிறது, அதை மீண்டும் துடிக்க வைத்த இறைவனுக்கு நண்றி சொல்கிறேன்"

"அப்படியா?"

முஸ்தபாவும் சுரேசும் சிறுவயது முதல் நன்பர்கள் அந்த நட்பு கல்லூரிவை தொடர்ந்தது. இன்று கல்லூரியின் இறுதி நாள்
farewell கொண்டாட்டங்களை முடித்து விட்டு வீட்டிற்க்கு செல்ல ஆயத்தமாயினர்.

"முஸ்தபா போலாமாடா?'

"கொஞ்ம் வெய்ட் பன்னு கால் தூங்கிருச்சி"

"ஒரு நாளைக்கு எத்தன தடவடா கால் தூங்கும்? எப்போ பாத்தாலும் கால் தூங்கிருச்சினு சொல்ற" அப்போதுதான் அதை கவனித்தான் சுரேஷ்

"என்னடா உன்ன்னுடைய கன்ணு ஒரு எடத்துல நிக்காம அங்கும் இங்குமா ஓடிக்கிட்டு இருக்கு?"

"ஆமாண்டா! அதுவே involentry ஆ move ஆகுதுடா"

"உன் கை வேற அடிக்கடி நடுங்குது சீகிரமா டாக்டரை போய் பாரு"

"ஆமாண்டா கைல வேற அப்பப்போ ஏதோ ஊர்வது மாதிரி இருக்குடா. சரிடா வா போலாம்"

இருவரும் அவரவர் வீட்டிற்க்கு சென்றனர். தேர்வுகள் முடிந்து சுரேசுக்கு பெங்களூரில் வேலை கிடைக்க அங்கு சென்றான். முஸ்தபா வேலைக்காக முயன்று கொண்டிருந்தான்.

ஒரு நாள் காலையில் படுக்கையில் இருந்து எழுந்தவன் நிற்க்க பேலன்ஸ் இல்லாமல் கீழே விழுந்தான். எழ முயற்சித்தான் முஸ்தபா முடியவில்லை.

"அம்மா" என்று அலறினான்.

உடனடியாக மருத்துவமனைக்கு அழித்து செல்லப்பட்டான். சோதித்து பார்த்த மருத்துவர் ஒரு பெரிய மருத்துவமனைக்கு செல்ல பரிந்துரைத்தார். அவனுடைய இடது கால் செயலிழந்து விட்டது. உடனடியாக அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டான். பரிசோதனைகள் செய்யப்பட்டன. மருத்துவர் அவனுக்கு ஏற்ப்பட்ட நோயை கூறியதும் குடும்பமே ஆடிப்போய்விட்டது.

Multiple Sclerosis இதுதான் நோயின் பெயர். நோயாளியின் தண்டுவடத்தை பாதிக்கும் இந்நோய் நோயாளியின் ஒவ்வொறு உறுப்பாக செயலிழக்க செய்து கடைசியில் மனிதனை நடை பினமாக அல்ல அல்ல கிடைபினமாக ஆக்கிவிடும். இறுதியில் மரணம். கொடுமையிலும் கொடுமை இந்நோய் கண்டுபிடித்து 120 ஆண்டுகளாகியும் இதுவரை மருந்து கண்டுபிடிக்க படவில்லை என்பதுதான், கை கால்கள் அடிககடி மரத்து போவது கை கால்களில் எறும்பு ஊர்வது போண்ற உணர்வுகள் ஏற்ப்படுவது, கருவிழி அங்குமிங்கும் அனிச்சையாக அலைபாய்வது, அடிக்கடி ஏற்ப்படும் தசை பிடிப்பு போன்றவை இதன் அறிகுறிகளாகும். இது யாரை வேண்டுமானாலும் தாக்கலாம்.




முஸ்தபா பெற்றோர்களுக்கு ஒரே மகன் அவனது தந்தை சிறு மளிகை கடை வைத்து குடுப்பத்தை நடத்திவந்தார். இப்போது யார் மேல் நம்பிக்கை வைத்தார்களோ அவனே இன்று முடமாக படுக்கையில். என்ன செய்வது மருத்துவ செலவுக்கே மாதம் இருபதாயிரம் ரூபாய் வேண்டும். கஷ்டப்பட்டு மருத்துவம் செய்தார்கள். அழுதார்கள் தெழுதார்கள் ஏனோ எதற்க்கும் பலனில்லை. நாள் ஆக ஆகஅவனுடைய ஒவ்வொரு உறுப்பாக செயலிழக்க ஆரம்பித்தது. இதை கேள்விப்பட்ட சுரேஷ் துடித்துவிட்டான். பார்த்தான் அழுதான் சென்றான் அவனாலும் தான் என்ன செய்யமுடியும்.

சில மாதங்களில் சுரேசுக்கு திருமணமானது முஸ்தபாவால் அதற்க்கும் செல்ல முடியவில்லை காரனம் அப்போது அவனுடைய இடுப்பு வரை செயலிழந்து இருந்தது. தனது வாழ்த்துக்களை தொலைபேசியில் தெரிவித்துக் கொண்டான்.

சில வருடங்கள் கழித்து உடலின் அனைத்து பாகங்களும் செயலிழந்து மரணத்தை எதிர்நோக்கி இருந்தான் முஸ்தபா. அவனுடைய கண் மட்டுமே அங்கும் இங்கும் அலையும் அவனிடம் எந்த சலனமும் இருக்காகது. மருத்துவமனையில் தான் வைதிருந்தார்கள். மரணப்படுக்கையில் இருக்கும் நன்பனை பார்க்க சுரேஷ் தன் இருசக்கர வாகனத்தில் புறப்பட்டான். விதி வலியது. அவனுடைய வாகனம் விபத்துக்குள்ளாகியது.

முஸ்தபாவை வைத்திருந்த மருத்துவனனையில் தான் அவனும் அனுமதிக்கப்பட்டான். சுரேசிடம் எந்த சலனமும் இல்லை. மூளை செயலிழந்து விட்டது இனி அவன் நினைவு திரும்ப வழியில்லை.

இரு நண்பர்கள் செயலிழந்த நிலையில் மருத்துமனையில். முஸ்தபாவின் முடிவு இப்படிதான் இருக்கும் என சில வருடங்களுக்கு முன்னமே தெரிந்து விட்டபடியால் அவனின் பெற்றோர்கள் மனதளவில் எதற்க்கும் தயாராக இருந்தனர். ஆணால் சுரேஷ் சற்று முன் கூட நண்றாக இருந்தவன் யாரும் எதிர்பார்க்கவில்லை. சுரேசின் ஆறு மாத குழந்தை கூட எதற்க்கு அழுகிறோம் என தெரியாமல் அழுது கொண்டு இருந்தது.

மருத்துவமனையின் தலைமை மருத்துவருக்கு ஒரு வினோதமான யோசனை வந்தது. முஸ்தபாவிற்க்கு மூளையை தவிர அனைத்து உறுப்புகளும் முற்றிலுமாக செயலிழந்து விட்டது. சுரேசுக்கு மூளையை தவிர மற்ற அனைத்து உறுப்புக்களும் நல்ல நிலையில் உள்ளன. மூளை மாற்று அறுவை சிகிசை.

இதுவரை இதயம் உட்பட உடலின் பல பாகங்கள் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு மற்றப்பட்டிருக்கிறது ஆணால் மூளை. மாற்ற முடியுமா?

மூளை என்பது ஒரு முழுமையான திடப் பொருளல்ல அது ஐஸ்கிரிம் உருண்டையை போன்றது. கைவைத்தாலே கொழ கொழவென ஆகிவிடும். அப்படிபட்ட மூளையை மற்ற முடியுமா? முயன்று பார்ப்போம். இதற்க்கு இரு குடும்பங்களும் சம்மதிக்க வேண்டுமே?

இரு குடும்பங்களையும் அழைத்த மருத்துவர் அவர்களிடம் தன் திட்டத்தை கூறினார். முஸ்தபா இன்னும் இரண்டு நாளோ அல்லது மூன்று நாளோ அதனால் அவனுடய பெற்றோர்கள் சம்மதித்துவிட்டனர். தன் மகன் கிடைக்கலாம் என சுரேஷின் பெற்றோர்களும் சம்மத்திதனர். ஒரு சுபமுகூர்த்த சுபதினத்தில் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிக்கப்பட்டது. ஆச்சரியம் அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்தது. அறுவை சிகிச்சை முடிந்து முஸ்தபாவின் உடல் பெற்றோர்களிடம் கொடுக்கப்பட்டது. நினைவு தெளியாத சுரேஷ் தீவிர கண்கானிப்பின் கீழ் வைக்கப்பட்டான்.

ஒரு மாதம் வரை சுயநிலைவு இல்லமல் இருந்தான் அவனுடைய காயங்கள் அனைத்து குணமாகிவிட்டது ஆணால் சுயநினைவு இன்னும் வரவில்லை. மருத்துவருக்கு தன்னுடைய சோதனை தோல்வியில் முடிந்ததென முடிவுகட்டி அவனுடைய உடல் பாகங்களை எடுத்து தேவையானவர்களுக்கு அனுப்ப ஏற்ப்பாடு செய்யப்பட்ட்து. அப்போது ஒடிவந்த ஒரு செவிலியர்.

"டாக்டர் பேஷண்ட் கை கால்களை அசைக்கிறார்" என்றதும் மருத்துவர் அலறி அடித்துக் கொண்டு ஒடினார்.

ஆம் அவன் கை கால்களை அசைத்தவாறு ஏதோ புலம்பிக்கொண்டிருந்தான். அவனை இன்னும் சிரத்தையாக பார்துக் கொண்டார் மருத்துவர். சில நாட்களில் நினைவு திரும்பியது சுரேசுக்கு. முழுமையாக நினைவு திரும்பிய சுரேஷை மருத்துவர் பரிசோதித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று தும்மியவன் கூறினான்

"அல்ஹம்துலில்லாஹ்"

யார் இவன்?



இந்த இடுகையின் இணைப்புகள் edit post


எதிர்பார்ப்போடு பார்த்த உன்னை போல் ஒருவன் பொசுக்கென்று ஆகிவிட்டது. A Wednesday ஆர்ப்பாட்டமில்லாத அட்டகாசமான படம் நஸ்ருதீன் ஷா மற்றும் அனுபம் கேர் ஒவ்வொரு காட்சியிலும் ஒருவர்யொருவர் முந்துவார்கள். குறிப்பாக முதல் காட்சியில் காவல் நிலையத்தில் குண்டு வைக்க வரும் நஸ்ருதின் ஷா அனுவளவும் பதட்டப் படாமல் காவல் அதிகாரியிடம் பேசுவார். இடையே கழிவறை எங்கு இருகிறது என மிக சாதரணமாக கேட்பார். ஆணால் கமல் தன்னுடைய பர்ஸ் தவறியதாக சொல்லிக் கொண்டிருக்கும் போது மிக அவசரமாக டென்சனாக டாய்லட் எங்கு இருக்கிறது என கேட்கிறார். ஏண் பதட்டப் பட வேண்டும் குண்டு வைக்க வருபவன் பதட்டத்துடன் தான் இருப்பான் என்பதை காட்டவா?



கமலின் அடையாளத்தை காவல் துறை அதிகாரி சொல்லும் போது தாடிவைத்திருந்தார், கையில் வெங்கடாசலபதி பை வைத்திருந்தார் என்றவுடன் சிலுவை அனிந்திருந்தாரா என கேட்கும் இடத்தையும் தவிர்த்திருக்கலாம். ஒரு தீவிரவாதி 2002ல் குஜராத்தில் நடைபெற்ற முஸ்லீகளுகெதிரான திட்டமிட்ட கலவரத்தில் எரிக்கப்பட்ட பெஸ்ட் பேக்கரியில் மனைவியை பறிகொடுத்ததால் 1998ல் கோவையில் குண்டு வைத்ததாக சொல்கிறார். இங்கு வனகர்த்தா, இயக்குனர் மற்றும் கமல் போன்றோர் யோசிக்கவில்லை என தெரிகிறது. என்ன கொடுமை சார் இது?.

ஒன்னு போனா என்ன இன்னும் இரண்டு இருக்குல்ல என்பன போன்ற வசனங்களை தவிர்த்திருக்கலாம். இதன் மூலம் சொல்ல வருவது என்ன அந்த தீவிரவாதியின் குரூர எண்ணத்தை காட்டவா அல்லதுனைவியை எரித்து விட்டார்களே என்ற பார்வையாளனின் பச்சாதாபம் அந்த தீவிரவாதிக்கு கிடைக்க கூடாது என்பதற்காகவா? அல்லது ஹிந்தியை நாங்கள் அப்படியே காப்பி அடிக்க வில்லை என காட்டவா? ஒன்னுமே புரியல.

மேலும் அந்த டிவி நிருபரை போலிசுக்கு ஆதரவாக செயல்படுமாறு மோகன்லால் Negotiate பண்ணும் போது உடனடியாக ஒத்துக் கொள்வார் அதற்க்காக காத்திருந்ததைப் போல். ஆனால் A Wednesday ல் அனுபம் கேர் கேட்கும் போது அந்த டிவி நிருபர் தன் தரப்பு நியாயங்களை கூறி மறுப்பார் அனுபம் கேர் கஷ்டபட்டு தன் வழிக்கு கொண்டு வருவார். நம்ம தமிழ் நிருபர் கமிஷனரின் முன்பாகவே புகை பிடிக்க முயல்வார் பொது இடத்தில் புகைபிடிப்பது தண்டனைக்குறிய குற்றம் என்பது ஊடகத்தில் பனிபுரியும் அவருக்கு தெரியாதா? பின்னர் அந்த நிருபர் காவல் துறைக்குஒத்துழைக்க சம்மதித்தப் பிறகு புகைபிடிக்க அனுமதி தருகிறார் கமிஷனர். அதாவது பொது இடத்தில் புகை பிடிப்பது குற்றம். குற்றமே என்றாலும் போலிசுக்கு தள்ள வேண்டியதை தள்ளினால் செய்யலாம் என்கிறாரா? (எப்பூடி கண்டுபிடிச்சோம்). அந்த பாத்திரம் அதுதாங்க கேரக்டர் தம்மடித்துத் தான் ஆக வேண்டுமா?. திரைக்கதை அமைப்பாளர் கவனித்து இருக்கலாம்.

எதற்க்காக தான் இதை செய்கிறேன் என common man விவரிக்கும் போது, குஜராத் கலவரத்தில் ஒரு கர்பமாக இருந்த முஸ்லீம் சகோதரியை கொன்று அவரின் வயிற்றை கீறி குழந்தையை எடுத்து தீயிலிட்டு கொளுத்தியதை நினைவுபடுத்தும் போது அவர் மட்டுமல்ல நம்மையும் கலங்க வைகிறார்.

மற்றபடி தமிழுக்கு முழுவதும் புதுமையான கதை திரைக்கதை விறுவிறுப்பான களம் மற்றும் கமல் மற்றும் மோகன் லாலின் அருமையான நடிப்பு என தூள் கிளப்பியிருகிறார்கள். அந்த சேது மற்றும் ஆரிப் கேரக்டர் Good performance என நான் சொல்ல தேவையில்லை.

கமல் பாஸிஸ்ட் என பல பதிவுகள் சுற்றியது இங்கு. என்னை கேட்டால் அவர் ஒரு வியபாரி கடையில் எதை வைத்தால் மக்கள் மொய்ப்ப்பர்கள்என தெரிந்து வைத்திருகிறார். எனக்கு அவர் திரையுலகின் அம்பானியாகத்தான் தெரிகிறார். படத்தை சக்ரி இயக்கியிருகிறாரம். சக்ரி கமலை இயக்கினாரா அல்லது சக்ரியை கமல் இயக்கினாரா? ஸ்ருதியின் இசையும் கலக்கியிருகிறது.

A Wednesday ரீமேக்கில் கமல் நடிகிறார் என தெரிந்தவுடன் கண்டிபாக ஹிந்தியை விட பெட்டராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை மேற்கூறிய சிறு சிறு தவறுகளால் சிதறடித்திருகிறார். ஒரே ஒரு ஆறுதல் இதில் விஜய் மற்றும் ரித்தீஸ் நடிக்கவில்லை என்பதுதான்.

அந்த கம்ப்யூட்டர் ஹேக்கர் சொல்லுவார் he is brainy but மேதை இல்லை.



வழிமொழிகிறேன்.



இந்த இடுகையின் இணைப்புகள் edit post

பள்ளி படிப்பு முழுவதும் தமிழ் வழி கல்விதான் என்றாலும் கல்லூரியில் ஆங்கில வழிக் கல்விதான். படிப்பு முடித்து வேலை தேடும் போது, வேலையில் என அனைத்து கடித்தப் போக்குவரத்தும் ஆங்கிலத்தில் தான். பின்னர் துபாய் சென்றதும் தமிழ் எழுதுவது என்பது அறவே இலாமலாகிவிட்டது. தொலைப்பேசி, இனைய அரட்டை என பல வழிமுறைகள் இருப்பதால் பெற்றோர்களுக்கு கடிதம் எழுதுவது கூட கிடையாது. பள்ளி இறுதித் தேர்வு முடிந்ததும் தமிழ் எழுதுவதை விட்ட நான் இங்கு வந்துதான் தமிழில் தட்டுகிறேண். அதுக்கு என்னன்றீங்களா?

ஒண்ணும் இல்ல. இப்படி டச்சே இல்லாம போனதுனால நான் தட்டுற தமிழில் எழுத்துப் பிழைகள் ஏராளம். அதனால ஆங்கிலத்தில் எழுத்துப் பிழைகளை காட்டும் spell checker போன்று தமிழ் எழுத்துப் பிழைகளை காட்ட இது போன்று spell checker இருக்கிறதா? நானும் முயன்று பார்த்து விட்டேன் கிடைத்து எதுவும் உருப்படியாக இல்லை. உருப்படியாக இருந்தாலும் நம்ம கலப்பையை ஏற்று கொள்ள மறுக்கிறது. அதனால் நல்ல வேலை செய்ய கூடிய தமிழ் spell checker இருக்கிறதா இருந்தா சொல்லுங்க பாஸ்.

இதுல ஏதாவது எழுத்துப் பிழை இருந்தா சொல்லுங்க மக்கா




இந்த இடுகையின் இணைப்புகள் edit post

SING IS KING (2)

3:23 AM by , under




இந்த இடுகையின் இணைப்புகள் edit post

EID MUBARAK (3)

3:05 AM by , under


அனைவருக்கும்

ரமலான்

பெருநாள் நல்வாழ்த்துக்கள்






இந்த இடுகையின் இணைப்புகள் edit post

ராகுல் காந்தி ரயிலில் சாதாரண வகுப்பில் போகிறாராம். சோனியா மற்றும் நிதியமைச்சர் ஆகியேர் விமானத்தில் எக்கனாமிக் கிளாசில் தான் பயணம் செய்தார்களாம்.
என்ன கொடுமை சார் இது. என்ன கஷ்டமோ சிக்கனமா இருக்காங்க. அத எதுக்குப்பா பப்ளிசிட்டி பண்றிங்க.

அது சரி MP மற்றும் அமைச்சர்களின் சம்பளத்தை எப்போ குறைக்ப்பாங்க?

_____________________________________________________________________________________

திருமனம் செய்யும் ஆண்களுக்கு ஆண்மை, HIV, AIDS மற்றும் மலட்டுதன்மை இல்லை என்ற திருமணத்தின் போது சான்றிதழ் கட்டாயமாக்க வேண்டுமென நடிகை மனோரமா
தெரிவித்துள்ளார். நல்லது. ஆனால் ஏண் ஆண்களுக்கு மட்டும் இச்சோதனையை பரிந்துரைக்கிறார். பெண்களும் இச்சோதனையை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என கூறி இருந்தால் வரவேற்றிருக்கலாம்.

ஆணால் இவருடைய வாதம் ஆண்கள் மட்டும் தான் தவறு செய்பவர்கள் போல் சித்த்ரிக்கிறது. யாராவது ஒரு ஆண் நடிகரே இயக்குனரோ பென்கள் இச்சோதனையை கட்டாயம் செய்ய வேண்டும் என கூறியிருந்தால் அவரை நடிகர் சங்கம் வரவழைத்து செருப்பால் அடித்திருப்பர்கள். ஆணால் நாங்கதான் அமைதியா இருக்கோம். மேற்கண்ட சோதனைகளுக்கு நாங்கள் தயார் தான் ஆனால் பென்களுக்கும் இதை கட்டாயமாக்க வேண்டும்.

மாப்பிள்ளைக்கும் பென்னுக்கும் HIV, AIDS இல்லை என சண்ரிதழை வழங்கிய பிறகே அரசு திருமணத்திற்க்கு அனுமதி அளிக்க வேண்டும். இது போன்று அனுமதி அளிக்க பட்ட திருமணங்களை மட்டுமே பதிவு செய்யப் பட வேண்டும். இந்த பதிவை அடப்படையாக வைத்து மட்டுமே குடும்ப அட்டையில் பெயர் சோர்பது மற்றும் பாஸ்போர்ட் வழங்குவது என கொண்டுவரலாம்.

ஆமாம் நடிகைங்க இந்த சோதனையை செய்வாங்களா?

------------------------------------------------------------------------------------=

இந்தியர்களின் கருப்பு பணம் தங்களிடம் இல்லை என சுவீஸ் வங்கிகள் தெரிவித்துள்ளன. இதை தொடர்ந்து மத்திய அரசு விசாரிக்க போகிறதாம். நல்ல பணமா இருந்த எதுக்கு அங்க கொண்டு போடனும்


நீ அடிக்கிற மாதிரி அடி நான் அழுகிற மாதிரி அழுகிறேனு சொல்லிருப்பாங்களோ?

-----------------------------------------------------------------------------------

கத்தாரில் கந்தசாமி பார்க்க போனால் மியாவ் மியாவ் பூனை பாட்ட கட் பண்ணிட்டாஙக. ஏன்னு கேட்டால அது ரொம்ப ஆபாசமாக இருக்குதாம். இது நம் தமிழ் நடிகைகளுக்கு தெரிஞ்சா கொதிச்சி போய்ட மாட்டாங்க அவங்கதான் கவர்ச்சியாக மட்டும் தான் நடிப்பாங்க தப்பித்தவறி கூட ஆபாசமா நடிக்க மாட்டாங்களே.

இந்த பாட்டுகாக மட்டுமே படம் பார்க்க போறவங்க கதி?

-------------------------------------------------------------------------------------

விஜயின் 50 படத்தில் மீனவராக வருகிறாராம். நாயகனின் பெயர் சுறாவாம். அதையே படத்தலைப்பாக வைத்து விட்டார்கள். முன்பு இப்படத்திற்க்கு உரிமைக்குரல் என்ற பெயரை பதிவு செய்து வைத்திருந்தார்கள் என்ன கரனத்தினாலோ இப்போது சுறா என பெயர் மாற்றம் செய்திருக்கிறார்கள். பாத்துங்க பாஸ் சுறாவ வச்சி சுறா புட்டு பன்னிட போறாங்க.

படகோட்டினு பெயர் வச்சிருந்தா அடுதத எலகச்னனுல முதல்வர் ஆயிடலாமே, ஏண் சார் வக்கல?

-------------------------------------------------------------------------------------



இந்த இடுகையின் இணைப்புகள் edit post

நேற்று சென்னையில் மானவர்களிடம் உரையாடிய ராகுல் விஜய் 35 வயதை தாண்டியதால் இளைஞர் காங்கிரசில் இடமில்லை என்றும் அவர் வந்தால் வரவேர்ப்போம் என்றும் சொல்லியிருக்கிறார்.

மேலும் அயோகியர்கள் மோசடி பேர்வழிகள், கடத்தல் காரர்கள் போன்றோருக்கு இடமில்லையாம். அப்படியானால் காங்கிரஸில் பல தலைவர்கள் வெளியேற வேண்டியது இருக்கும்.

ஏண் இந்திரா காந்தி கொலைக்கு பலி வாங்குகிறேன் என்று பல சீக்கியர்களை கொலை செய்தது, விஷ வாயு கசிந்த பிரச்சனியில் உள்ளுர் மக்கள் அமெரிக்க நீதிமன்றத்தில் தெடர்ந்த வழக்கை வாபஸ் வாங்கியது, நீதி மண்ற உத்தரவை துக்கி எறிந்து பாபர் மசூதியை திறந்து விட்டு பிரச்சனைக்கு வழி வகுத்தது அயோக்கியத்தனம் இல்லையா? போபர்ஸ் பீரங்கி வாங்கியதில் உழல் செய்தவர்
மோசடிப் பேர்வழி இலையா? மேலும் தொகுதி பக்கமே போகாமல் சொத்து மட்டும் சேர்த்த தங்கபாலு மோசடிப் பேர்வழி இல்லையா?. இது போன்று பல சொல்லி கொண்டே போகலாம்.

அப்படினா ராஜீவ்காந்தி பெயர் முதல் கொண்டு(அவர் இறந்து விட்டதால் பெயரை மட்டும்தான் நீக்க முடியும்) பல காங்கிரஸ் தலைவர்களை நீக்க போகிறாரா ராகுல்?

SmileyCentral.com



இந்த இடுகையின் இணைப்புகள் edit post

இளைய தளபதி விஜய் காங்கிரஸில் சேரப்போவதாக வந்த தகவல்களினால் திமுக தரப்பு கடுப்பாகி இருக்கிறதாம். நேற்று முந்தினம் அவரது திருமன மண்டபத்தின் முகப்பில் போட பட்டிருக்கும் பந்தல் பொதுப்பனித்துறக்கு சொந்தமான இடம் என்று தமிழக பொதுப்பணித்துறை நோட்டிஸ் கொடுத்துள்ளது. மேலும் விஜயின் தந்தையிடம் காங்கிரஸில் சேருவதர்க்கு திமுக தரப்பிலிருந்து அதிருப்தி தெரிவிக்காப்பட்டுள்ளதாம்.

உதயநிதியின் தயாரிப்பில் குருவி படத்தில் நடித்த போது திமுகவிற்க்கு நெருங்கி வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. தற்ப்பொது காங்கிரசுக்கும் திமுகவிற்க்கும் நல்ல உறவு இல்லாத சமயத்தில் ராகுல் விஜய் சந்திப்பு நடந்திருப்பது திமுகவை கடுப்படித்திருக்கிறது. அதானால் கான்ஹ்கிரஸில் இனையும் திட்டத்தை தள்ளி வைத்திருக்கிரார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

காங்கிரஸில் இனைந்திருந்தால் குருவி படத்திற்க்கு தேசிய விருதாவது கிடைத்திருக்கும்.

சென்னையில் ராகுலை 35 வயதிற்க்கு மேற்பட்டவர்கள் சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்லதாம். அதனால் தான் தளபதி ராகுலை சந்திக்க வில்லையா?

கொசுறு தகவல்: விஜய் காங்கிரஸில் தொண்டராக மட்டுமே இருந்தால் போதுமொன இளங்கோவன் கூறியிருக்கிறார். அப்போ தளபதிக்கு போஸ்டர் ஒட்ற வேலைதானா? அடங்கொய்யால?.



இந்த இடுகையின் இணைப்புகள் edit post